பிக்பாஸில் அதிரடி மாற்றம்.. புதிய தொகுப்பாளினியாக களமிறங்கும் ரம்யாகிருஷ்ணன்.. புரொமோவால் அதிர்ச்சி
ஹைதராபாத்: பிக் பாஸ் தெலுங்கு சீசன் 3 நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளினியாக ரம்யாகிருஷ்ணன் அறிமுகமாகும் புரொமோ மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தமிழில் கிட்டத்தட்ட 70 நாட்களை நெருங்கி வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. தற்போது பிக் பாஸ் வீட்டில் எட்டு போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வாரம் எவிக்சன் இல்லை என்பதால், போட்டியாளர்களை மாற்றி மாற்றி எதையாவது பேச வைத்து நேற்றைய எபிசோட்டை தேற்றியுள்ளனர்.
அதனால் இன்றைய நிகழ்ச்சியிலும் விறுவிறுப்பு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிரடியாக ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் நாகார்ஜுனா
தமிழைப் போலவே தெலுங்கிலும் பிக் பாஸ் சீசன் 3 ஒளிபரப்பாகி வருகிறது. இதனை பிரபல நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். முதல் இரண்டு சீசன்களையும் வேறு வேறு நடிகர்கள் தொகுத்து வழங்கிய நிலையில், மூன்றாவது சீசனை இவர் தொகுத்து வழங்குகிறார்.

சிவகாமி கெட்டப்
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள புதிய புரொமோவில் நாகார்ஜுனாவிற்குப் பதில் ரம்யா கிருஷ்ணன் புதிய தொகுப்பாளினியாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். பாகுபலி சிவகாமி கெட்டப்பில் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த புரொமோவைப் பார்த்து முதலில் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

எதிர்ப்பு
ஏனெனில் ஆரம்பம் முதலே இந்த சீசன் 3யை தொகுத்து வழங்கப் போவது யார் என்ற கேள்வி மக்களிடையே இருந்து வந்தது. அதற்குக் காரணம் பல நடிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர மறுத்தது தான். பின்னர் ஒரு வழியாக நாகார்ஜுனா பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் நாகார்ஜுனா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கடும் எதிர்ப்பு நிலவி வந்தது.

குழப்பம்
இந்த சூழ்நிலையில் அவருக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் தொகுப்பாளினியாக களமிறங்கியிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. ஒருவேளை நிகழ்ச்சியில் இருந்து நாகார்ஜுனா விலகி விட்டாரோ, இனி அவருக்குப் பதில் ரம்யா தான் தொகுத்து வழங்குவாரோ என்ற குழப்பம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

பிறந்தநாள் கொண்டாட்டம்
ஆனால், உண்மை என்னவென்றால் நாகார்ஜுனா தனது 60வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக மனைவி, மகன்கள் மற்றும் மருமகளுடன் ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். கடந்த 29ம் தேதி அங்கிருந்தபடி பிறந்தநாள் கொண்டாட்டங்களை புகைப்படங்களாக சமூகவலைதளங்களிலும் வெளியிட்டனர்.

தற்காலிக தொகுப்பாளர்
அவர் சுற்றுலா சென்றிருப்பதால் தான், தற்காலிகமாக சிறப்பு தொகுப்பாளராக ரம்யாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டுள்ளார். அடுத்த வாரம் முதல் மீண்டும் நாகார்ஜுனாவே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார் எனக் கூறப்படுகிறது. ரம்யாவும் தனது கம்பீரமான குரலால் நிகழ்ச்சியை சிறப்பாகவே தொகுத்து வழங்குகிறார்.

சிம்பு
தெலுங்கைப் போலவே தமிழிலும் கூட கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகப் போவதாக சமீபகாலமாக ஒரு தகவல் உலா வருகிறது. அவருக்குப் பதில் சிம்பு பிக் பாஸ் சீசன் 4ஐ தொகுத்து வழங்குவார் எனக் கூறப்படுகிறது. இது எந்தளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











