புஷ்பா 2 பாட்டுக்கு புருஷனோட ஆட்டம் போட்ட தாமரை செல்வி.. எங்கே டூர் அடிக்கிறாங்கன்னு பாருங்க!

கோவா: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான தாமரை செல்வி தற்போது தனது கணவர் பார்த்தசாரதியுடன் கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவர் தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் தீயாக பரவியது.

நாடகக் கலைஞராக தெருக்கூத்துக்களில் நடனமாடிக் கொண்டிருந்த தாமரைச்செல்வி பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5ல் போட்டியாளராக பங்கேற்றார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தாமரை அதன் பின்னர் சிம்பு தொகுத்து வழங்கிய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார்.

Television Bigg Boss Thamarai Selvi Vijay Tv Rashmika Mandanna Pushpa 2 2

விஜய் டிவியில் தொடர்ந்து சின்னத்திரை தொடர்களில் நடித்து வரும் தாமரை செல்வி தற்போது தனது கணவருடன் கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கே அவர் கணவருடன் ஆட்டம் போட்ட வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

உழைத்தால் உயரலாம்: ஒன்றுமே தெரியாமல் விஜய் டிவிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க தாமரை செல்வி வந்த நிலையில், ஆரம்பத்தில் பிக் பாஸ் போட்டியாளர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர். ஆனால் தொடர்ந்து முயற்சி செய்து கடைசி வாரம் வரை அவர் தனது விளையாட்டை விளையாடி ஏகப்பட்ட ரசிகர்களின் மனதை பிடித்து விட்டார். உழைத்தால் உயரலாம் என்பதற்கு உதாரணமாக தாமரை செல்வி உள்ளார் என அவரது ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.

2ம் கணவருடன் கோவா டூர்: தாமரை செல்விக்கு நடந்த முதல் திருமணம் சரியாக அமையவில்லை. சிவராமன் என்கிற மகனும் தாமரை செல்விக்கு உள்ளார். இரண்டாவதாக பார்த்தசாரதி என்பவரை திருமணம் செய்துகொண்ட தாமரை செல்வி தெருக்கூத்துக்களில் நடிப்பதைத் தாண்டி சின்னத்திரை மற்றும் சினிமா என தற்போது நடித்து வருகிறார். அவருக்கு இரண்டாவது கணவர் பக்கபலமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் இருந்து கோவாவுக்கு தனது இரண்டாவது கணவருடன் தாமரைச்செல்வி சுற்றுலா சென்றுள்ள நிலையில், அங்கே எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தற்போது வெளியிட்டு வருகிறார்.

புஷ்பா 2 பாட்டுக்கு: ராஷ்மிகா மந்தனா மற்றும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 திரைப்படம் ஒரு ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அந்த படத்தின் இரண்டாம் சிங்கிளான “சூடான தீ கங்கு மாதிரி இருப்பானே என் சாமி” என தாமரை செல்வி தனது கணவருடன் கோவாவில் நடனமாடிய வீடியோவை தற்போது வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

காசு இருந்தா காக்கா கூட: தாமரை செல்வியின் இந்த வீடியோவை பார்த்து கடுப்பான சில நெட்டிசன்கள் “காசு இருந்தா காக்கா கூட கலர் ஆகும்” என கலாய்த்து வருகின்றனர். சிலர், ஃபர்ஸ்ட் ஹாஃப்ல கஷ்டப்பட்டா, செகண்ட் ஹாஃப் நல்லா இருக்கும் போல” என தாமரையை ஊக்கப்படுத்தி வருகின்றனர். வசதியும் வாய்ப்பும் வந்தா எல்லாருமே இப்படித்தான் மாறிவிடுவார்கள் என்றும் ஓவர் ஆட்டம் உடம்புக்கு நல்லது இல்லை என்றும் ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. நீங்க கஷ்டப்பட்டு உழைச்சீங்க, நல்லா என்ஜாய் பண்ணுங்க தாமரை ராஷ்மிகாவை விட நல்லாவே ஆடுறீங்க என அவரது ரசிகர்கள் சப்போர்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X