ஆமை மாதிரி வந்தாங்க.. எல்லாமே போச்சு.. துரோகத்தை மறக்க முடியல.. பிக் பாஸ் தாமரை செல்வி வேதனை!
சென்னை: பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் அறிமுகம் இல்லாத போட்டியாளராக தாமரை செல்வி கலந்து கொண்டார். நாட்டுப்புற கலைஞராக ஒரு சிலருக்கு மட்டுமே பரிச்சயமானவராக இருந்த இவர், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டிலை இவர் ஜெயிக்கவில்லை என்றாலும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பிஸியாக தாமரை செல்வி, பிக் பாஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய கணவரோடு ஆட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்தார்.
இதையடுத்து, விஜய் தொலைக்காட்சியில் சின்ன மருமகள் சீரியலில் நடித்து வந்த இவர், திடீரென அந்த சீரியலில் இருந்து விலகினார். அதன் பின் யூடியூப், இன்ஸ்டாகிராமில் தலைகாட்டாமல் இருந்த தாமரை செல்வி திடீரென தான் துரோகத்தை என்னால் தாங்க முடியவில்லை நான் மன உளைச்சலில் இருக்கிறேன் என இன்ஸ்டாகிராமில் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் தாமரைச்செல்வி: அதில், இந்த காலத்துல யாரை நம்புறது, யாரை நம்பக்கூடாது என்று எதுவுமே தெரியல. பெரிய மன உளைச்சலில் நான் இருக்கேன். ஒருவருடன் பழகுவதற்கு முன்பு அவர்களை பற்றி நன்றாக தெரிந்து கொண்டு பழக வேண்டும் இல்லை என்றால், எனக்கு வந்தது போலத்தான் பிரச்சனை வரும். எங்க ஊருல ஒரு விஷயத்தை சொல்லுவாங்க. ஆமை புகுந்த வீடு விளங்காதுன என்று, அந்த மாதிரி என் வீட்டுக்குள் ரெண்டு ஆமை புகுந்துச்சு, அந்த ரெண்டு ஆமை வந்ததிலிருந்து என்னோட வாழ்க்கையே சின்னா பின்னமாகிப்போச்சு. ஆனா ஆமை நல்லா தான் இருக்கு, என் வீடு தால் துரோகத்தில் பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கு. அந்த ஆமை யார் என்ன என்பதை விரைவில் வீடியோவில் சொல்கிறேன். நீங்க என்னை திட்டினாலும், எனக்கு ஆதரவாக இருப்பது நீங்க மட்டும் தான், அதனால், அந்த ஆமையை பற்றி சீக்கிரம் அடுத்த வீடியோவில் சொல்கிறேன் என மன வேதனையுடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அண்மையில் தாமரை செல்வி சின்னமருமகள் சீரியலில் இருந்து விலகியதற்கும் இதுதான் காரணமாக இருக்கும் என இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











