பிக் பாஸ் தாமரைசெல்வி சினிமாவில் என்ட்ரி.. அதுவும் பிரபல நடிகருக்கு ஜோடி!
சென்னை: பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் நாட்டுப்புற கலைஞரான தாமரை செல்வி கலந்து கொண்டார். 20 ஆண்டுக்கும் மேலாக நாட்டுப்புற கலைஞராக இருந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டிலை இவர் ஜெயிக்கவில்லை என்றாலும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பிஸியான தாமரை செல்வி, பிக் பாஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய கணவரோடு ஆட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்தார்.
அதன்பின் விஜய் தொலைக்காட்சியில் சின்ன மருமகள் சீரியலில் நடித்து வந்த இவர், திடீரென அந்த சீரியலில் இருந்து விலகினார். திடீரென அந்த சீரியலில் இருந்து ஏன் விலகினார் என அவரின் ரசிகர்கள் குழம்பிய நிலையில், இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு, இந்த காலத்துல யாரை நம்புறது, யாரை நம்பக்கூடாது என்று எதுவுமே தெரியல. பெரிய மன உளைச்சலில் நான் இருக்கேன். ஒருவருடன் பழகுவதற்கு முன்பு அவர்களை பற்றி நன்றாக தெரிந்து கொண்டு பழக வேண்டும் இல்லை என்றால், எனக்கு வந்தது போலத்தான் பிரச்சனை வரும், என் வாழ்க்கையில் வந்த இரண்டு பேரால் மன வேதனையில் இருக்கிறேன் என சொல்லி இருந்தார். ஆனால், பிரச்சனை என்ன, பிரச்சனைக்கு யார் காரணம் என சொல்லவில்லை.

சினிமாவில் தாமரைசெல்வி: இந்நிலையில், தற்போது தாமரை முதன் முறையாக சினிமாவில் நடித்துள்ளார். அதுவும் டாப் நடிகருக்கு மனைவியாக நடித்துள்ளார். மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் 'ஆழி'. இப்படத்தில் சரத்குமார் , இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்செல்வி, ஸ்ரீ ஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் வையாபுரிக்கு ஜோடியாக தாமரை செல்வி நடித்துள்ளார். இது தமிழ்செல்வி நடிக்கும் முதல் திரைப்படம். பிப்ரவரி 27ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தாமரைச்செல்வி, ஏற்கனவே சீரியலில் நடித்தால் சினிமாவில் நடிக்க பயம் இல்லை, சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை என தனது விருப்பத்தை தாமரைசெல்வி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











