அட நம்ம தாமரைச்செல்வியா இது? என்னா தைரியம்பா.. குவியும் பாராட்டு!

சென்னை: பிக்பாஸில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமான தாமரைச்செல்வி தனது கணவருடன் வெளிநாடுக்கு சென்று இருக்கும் நிலையில் துணிச்சலாக வாட்டர் டைவிங் செய்யும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபலமான நிகழ்ச்சியாக உள்ளது பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெரும்பாலான போட்டியாளர்கள் யார் என்ற அடையாளமே தெரியாமல் இருந்திருந்தால் கூட இந்த நிகழ்ச்சிக்கு வந்த பிறகு மிகப்பெரிய அளவில் பெயரும் புகழும் சம்பாதித்து சினிமாவில் வாய்ப்பு பெற்று நட்சத்திரங்களாக மாறிவிடுகிறார்கள். அப்படி சாதாரணமாக நடமாடிக்கொண்டிருந்தவர் தான் தாமரைச்செல்வி.

Thamarai selvi Bigg Boss

பிக் பாஸ் தாமரைச்செல்வி: இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களை வெகுவாக கவர்ந்திழுத்தார். இவரின் எதார்த்தமான பேச்சும், தன்னம்பிக்கையும் இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்துப்போனது. குறிப்பாக தனது முதல் கணவரால் பட்ட கஷ்டத்தை கூறி, மகனை மீண்டும் பார்க்க வேண்டும் என அவர் பிக் பாஸ் வீட்டில் கதறி அழுதார். இதனால், பல பெண்களின் மனதில் இடம் பிடித்து அந்த நிகழ்ச்சியில் இறுதிவரை வந்தார்.

சீரியலில் பிஸி: அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தாமரைக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பும் வெள்ளி திரையில் நடிக்கும் வாய்ப்பும் குவிந்து கொண்டே இருந்தது. தொடர்ச்சியாக வாய்ப்புகளை விட்டு விடாமல் அதனை பயன்படுத்திக்கொண்டார் தாமரை. பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிகளிலும் கூட தாமரை தொடர்ச்சியாக கலந்து கொண்டு தனது கணவருடன் சேர்ந்து ஆட்டம் போட்டு அனைவரையும் அசத்தினார்.

மேலும் இவர் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்து பாரதிகண்ணம்மா சீரியலில் ஒரு சின்ன ரோலில் நடித்து ஒட்டுமொத்த இல்லத்தரசிகளின் மனத்தையும் கவர்ந்து விட்டார். தற்போது சின்ன மருமகள் சீரியலில் கதாநாயகிக்கு அம்மாவாக நடித்து வருகிறார். இந்த ரோல் அவருக்கு மிக கச்சிதமாகவும் இல்லத்தரசிகளின் மனம் கவரும் கேரக்டராகவும் இருந்து வருகிறது.

துணிச்சலான பெண்: தாமரைச்செல்வி தனது கணவர் பார்த்தசாரதியுடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து லைக்குகளை அள்ளி வருகிறார். தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராமில் வாட்டர் டைவிங்கை துணிச்சலாக செய்து அசத்தி உள்ள வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். அந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X