நான் பண்ண சின்ன தப்பு.. சீரியலும் இல்ல, ரியாலிட்டி ஷோவும் இல்ல.. புலம்பும் தாமரைசெல்வி!
சென்னை: மேடை நாடகங்களில் ஆடிவந்த தாமரைசெல்விக்கு நல்ல அறிமுகத்தையும் வாழ்க்கையும் கொடுத்தது விஜய் டிவி தான். யார் என்றே தெரியாமல் இருந்த தாமரையை பிரபலப்படுத்தியது விஜய் டிவி.
பிக் பாஸ் 5வது சீசனில் போட்டியாளராக தாமரைசெல்வி கலந்து கொண்டார். பிக் பாஸ் 5வது சீசனில் பிரியங்கா , பாவனி, அமீர் என பிரபலமானவர்கள் பலர் கலந்து கொண்ட போதும் தன்னுடைய இயல்பான பேச்சாலும், தைரியாத்தாலும் பிக் பாஸ் வீட்டில் 90 நாட்கள் இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார் தாமரைசெல்வி.
டைட்டிலை வெல்லவில்லை என்றாலும், அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தாமரைசெல்வி, பிக் பாஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய கணவரோடு கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து, விஜய் டிவியில் சின்ன மருமகள் சீரியலில் முக்கியமான ரோலில் நடித்து வந்த, இவர் திடீரென சீரியலில் இருந்து விலகினார். இதையடுத்து திடீரென தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு இருந்த தாமரை செல்வி, துரோகத்தை என்னால் தாங்க முடியவில்லை நான் மன உளைச்சலில் இருக்கிறேன். இந்த காலத்துல யாரை நம்புறது, யாரை நம்பக்கூடாது என தெரியல. பெரிய மன உளைச்சலில் நான் இருக்கேன். ஒருவருடன் பழகுவதற்கு முன்பு அவர்களை பற்றி நன்றாக தெரிந்து கொண்டு பழக வேண்டும் இல்லை என்றால், எனக்கு வந்தது போலத்தான் பிரச்சனை வரும் என புலம்பி வீடியோ வெளியிட்டு இருந்தார்.

பிக் பாஸ் தாமரைசெல்வி: இந்நிலையில், சீரியலில் இருந்து விலகியது குறித்து பேசி இருக்கும் தாமரைசெல்வி, எனக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்தது விஜய் டிவி தான். பிக் பாஸ் நிகழ்ச்சி எனக்கு நல்ல அனுபவத்தை கொடுத்தது. அந்த நிகழ்ச்சியில் மக்கள் எனக்கு கொடுத்த ஆதரவால், நான் 90 நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தேன். அதைத்தொடர்ந்து, எனக்கு விஜய் டிவியில் சின்ன மருமகள் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நல்ல கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு இருந்தேன். அதே நேரம் சின்ன சின்ன நிகழ்ச்சிக்கும் சென்று வந்தேன். ஒரு நாள் சீரியல் ஷூட்டிங்கிற்கு என்னால் தேதி தர முடியாமல் போய்விட்டது. இதனால் அந்த சீரியலில் இருந்து என்னை தூக்கிவிட்டு வேறு ஒரு நடிகையை போட்டு விட்டார்கள். இது எனக்கு வருத்தமாக தான் இருக்கிறது. இப்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறேன். தற்போது சரத்குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் 'ஆழி' திரைப்படத்தில் நடிகர் வையாபுரியின் மனைவியாக நடித்து இருக்கிறேன் என்றார்.
புலம்பும் தாமரை: அதேபோல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'கில்லாடி ஜோடிஸ்' நிகழ்ச்சிக்கும் என்னை அழைத்திருந்தார்கள். அதிவ் கலந்து கொள்வதற்காக நானும் என் கணவரும் சென்று இருந்தோம். மலை ஏற வேண்டும், கடலில் குதிக்க வேண்டும், பலவிதமான சாகசங்களை செய்ய வேண்டும் என பல திகிலான விஷயத்தை சொன்னார்கள். அதற்கும் நானும் என் கணவரும் தயார் என்று தான் சொன்னோம். ஆனால், பிறகு அழைக்கிறோம் என சொல்லிவிட்டார்கள். என்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என தாமரைசெல்வி புலம்பி உள்ளார்.


Click it and Unblock the Notifications











