என்ன பெரிய நயன்தாரா, விக்கி.. நாங்களும் ஜோடியா ஃபாரீன் டூர் போவோம்.. ஆளே மாறிய பிக் பாஸ் தாமரை!

சென்னை: பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட தாமரை செல்வி தனது கணவருடன் வெளிநாட்டுக்கு டூர் அடிக்க கிளம்பிய நிலையில், வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அடிக்கடி ஃபாரீன் டூருக்கு செல்லும் போது வெளியாகும் போட்டோ அளவுக்கு தாமரை செல்வி தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் வெளியானதை பார்த்து ரசிகர்கள் வாவ் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சின்னத்திரை, வெள்ளித்திரை என நடிக்க வாய்ப்புகள் குவிந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு தனது சொந்த ஊரான புதுக்கோட்டையில் புதிதாக வீடு கட்டியும் குடிபுகுந்தார் தாமரை செல்வி.

Television Nayanthara Bigg Boss Thamarai Selvi Vijay Tv

தெருக்கூத்து கலைஞராகவும் நாடக கலைஞராகவும் பல திருவிழாக்களில் நடித்து வந்த தாமரை செல்வி பிக் பாஸ் சீசன்5ல் போட்டியாளராக பங்கேற்ற போது தனக்கு எதுவுமே தெரியாது என சொல்லியே கடைசி வரை அந்த போட்டியில் முன்னேறி வந்தது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் தாமரை: நாடக கூத்துக் கலைஞரான தாமரை செல்வி சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்களுடன் போட்டிப் போட பிக் பாஸ் சீசன் 5ல் களமிறங்கினார். ராஜு ஜெயமோகன், பிரியங்கா தேஷ்பாண்டே, நிரூப், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்ற அந்த சீசனில் கடைசி வரை போட்டிப் போட்டு கலக்கிய தாமரை செல்வி பிக் பாஸ் அல்டிமேட், பிக் பாஸ் ஜோடிகள் என தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை விடாமல் பிடித்துக் கொண்டு நல்ல வருமானம் ஈட்டினார்.

Television Nayanthara Bigg Boss Thamarai Selvi Vijay Tv

காசு, பணம், துட்டு மணி: பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் 19 நாட்களில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் தாமரைச்செல்வி போட்டியாளராக பங்கேற்றார். சிம்பு அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது. வனிதா விஜயகுமார், ஜூலி உள்ளிட்ட பிரபலங்களுடன் போட்டி போட்டார். பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி முடிந்த பின்னர், தனது கணவருடன் இணைந்து கொண்டு பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் ஆட்டம் போட்டு அனைவரையும் அசத்தினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தாமரைச்செல்வி விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்தார். அதன் பின்னர் பல சீரியல்களில் தற்போது நடித்து வருகிறார்.

Television Nayanthara Bigg Boss Thamarai Selvi Vijay Tv

புது வீடு: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக வந்த பலர் நல்ல வருமானத்தை ஈட்டி செட்டில் ஆன நிலையில் தனது சொந்த ஊரான புதுக்கோட்டையில் உள்ள A.மாத்தூரில் புதிதாக வீடு கட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புதுமனை புகு விழாவையும் நடத்தி சில பிக் பாஸ் பிரபலங்களை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்.

கணவருடன் ஃபாரீன் டூர்: கணவர் பார்த்தசாரதியுடன் தற்போது சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்ல கிளம்பி உள்ள தாமரை செல்வி "One Life One world Explore it" என கேப்ஷன் கொடுத்து வெளியிட்ட போட்டோவை பார்த்து நம்ம பிக் பாஸ் தாமரை செல்வியா? இது? என வாயடைத்துப் போயுள்ளனர்.

என்ன பெரிய நயன்தாரா?: விக்னேஷ் சிவன் - நயன்தாரா தான் டூருக்கு இப்படி போவாங்களா என்கிற ரேஞ்சுக்கு கார்கோ பேண்ட், ஸ்ட்ரெய்டனிங் பண்ண ஹேர், டிசர்ட் என தாமரை செல்வி ஆளே மாறிவிட்டார். அவரது வளர்ச்சியை கண்டு ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். சில நெட்டிசன்கள் இந்த கொடுமையெல்லாம் பார்க்கணுமா? என கிண்டல் செய்து ட்ரோல் கமெண்ட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X