"ஊ சொல்றியா மாமா"...தாமரை, ஐக்கி பெர்ரியின் கலக்கல் டான்ஸ்...ஆட்டம்னா இதுதான்

சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளரான தாமரைச்செல்வி சமந்தாவின் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் டிராண்டாகி வருகிறது.

Recommended Video

ஆட்டம்னா இப்படி இருக்கணும்... ஊ சொல்றியா மாமா பாடலுக்கு பிக் பாஸ் தாமரை செம டான்ஸ் !

தாமரையின் டான்ஸை பார்த்த ரசிகர்கள், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்த தாமரையா இது என கேட்டு வருகின்றனர்.

 பிக் பாஸ் சீசன் 5

பிக் பாஸ் சீசன் 5

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் முகம் தெரியாத நபர்கள் தான் அதிகம் இருந்தார்கள். அதில் ஒருவர் தான் தாமரை செல்வி. நாடக நடிகரான இவர் பிக் பாஸில் நுழைந்த ஒரு சில நாட்களிலேயே வெள்ளந்தியான குணத்தால் அனைவரையும் கவர்ந்தார்.

திடீரென வெளியேறினார்

திடீரென வெளியேறினார்

ஆரம்பத்தில் அப்பாவி போல இருந்த தாமரை பல வாரங்கள் செல்ல செல்ல அனைவர் மனதிலும் இடம் பிடித்து டாப் 10 போட்டியாளர்களில் ஒருவராக வந்தார். தாமரைச்செல்வி பைனல் வரை வருவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், திடீரென வெளியேறி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார்.

மக்களை கவர்ந்த தாமரை

மக்களை கவர்ந்த தாமரை

தாமரைச் செல்வி வெளியேறியதை கமல் கூட எதிர்பார்க்கவில்லை, அவரும் நீங்கள் இறுதிப்போட்டி வரை வருவீர்கள் என்று நான் மிகவும் எதிர்பார்த்தேன் என்று கூறியிருந்தார். தாமரையின் எதார்த்தமானப் பேச்சும், தவறு என்றால் துணிந்து கேள்வி கேட்கும் குணம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்து விட்டது.

ஊ சொல்றியா மாமா

ஊ சொல்றியா மாமா

இந்நிலையில், தாமரை செல்வி மற்றொரு பிக் பாஸ் போட்டியாளரான ஜக்கி பெர்ரியுடன் சேர்ந்து நடனமாடி வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய ஊ சொல்றியா மாமா.... ஊஊ சொல்றியா மாமா பாடலுக்கு ஐக்கி பெர்ரியுடன் இணைந்து கலக்கலாக ஆட்டம் போட்டுள்ளார்.

நம்ம தாமரையா இது

நம்ம தாமரையா இது

இந்த வீடியோவை ஐக்கி பெர்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், அட நம்ம தாமரையா இது என்றும், விட்டா சமந்தாவுக்கே டஃப் கொடுப்பாங்க போல என்று தாமரையை கிண்டலடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X