வாழ்ந்தா இப்படி வாழணும்.. கொடைக்கானலில் கனிமா பாட்டுக்கு ஆட்டம் போட்ட பிக் பாஸ் தாமரை.. செம ஃபன்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசனில் கலந்துக் கொண்ட போட்டியாளர்களில் பலர் இன்னமும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டும் புதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லையே என அழுது புலம்பிக் கொண்டிருக்கும் நிலையில், வாழ்ந்தா இப்படி வாழணும் என மற்றவர்களை பொறாமைப்பட வைத்து வருகிறார் பிக் பாஸ் தாமரைச்செல்வி.

பிக் பாஸ் என்றால் என்னவென்றே தனக்குத் தெரியாது என அப்பாவி கிராமத்துப் பெண்ணாக நிகழ்ச்சிக்குள் வந்து புராணத்தில் வரும் வாலி போல மற்றவர்கள் விளையாடுவதை பார்த்து அதை புரிந்துக் கொண்டு கடைசி வரை விளையாடி மற்ற போட்டியாளர்களுக்கே தண்ணிக் காட்டினார் தாமரைச் செல்வி.

Bigg Boss Thamaraiselvi dance for Retro Kanima song at Kodaikanal

பிக் பாஸ் முடிந்த பின்னர், தனக்கு கிடைத்து வரும் சில சீரியல் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு சம்பாதிக்கும் பணத்தில் கணவருடன் சேர்ந்துக் கொண்டு பல இடங்களுக்கு சுற்றுலா சென்று ஜாலியாக வாழ்க்கையை அனுபவித்து வருவதை வீடியோக்களாக வெளியிட்டு வருகிறார்.

இருப்பதை கொண்டு சந்தோஷம்: சிலருக்கு எவ்வளவு தான் பட வாய்ப்புகள் வந்தாலும், பெரிய நடிகையாக முடியவில்லையே என்கிற விரக்தியால் கிடைக்கும் பட வாய்ப்புகளையும் வேண்டாம் என ஒதுக்கி வைத்து விட்டு சில மாதங்களுக்கு அழுது புலம்புவதை ரசிகர்கள் பார்த்து வரும் நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட தெருக்கூத்து கலைஞரான தாமரை மக்களின் செல்வாக்கை பெற்று கடைசி வரை சிறப்பாக விளையாடினார். டைட்டில் வெல்லவில்லை என்றாலும் மக்களின் அன்பை வென்றுள்ளார்.

கொடைக்கானலில் கனிமா பாட்டுக்கு டான்ஸ்: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் நடித்து வரும் ரெட்ரோ படம் வரும் மே 1ம் தேதி வெளியாகிறது. சமீபத்தில், சந்தோஷ் நாராயணன் அந்த படத்துக்குப் போட்ட கனிமா பாடலுக்கு ஏகப்பட்ட இளம் பெண்கள் ரீல்ஸ் போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்மரை ஜாலியாக கொண்டாட கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ள தாமரைச் செல்வி கனிமா பாடலுக்கு நடனமாடிய ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஒரே ஃபன் மோடு தான்: தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்துக் கொண்டு நடனமாடிய இன்னொரு வீடியோவையும் சற்றுமுன் தாமரைச் செல்வி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார். ஏற்கனவே இவர் கோவாவுக்கு கணவருடன் சென்று ஆட்டம் போட்டது எல்லாமும் ரசிகர்களால் லைக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X