அருண் தான் என் உலகம்.. என்னப்பத்தி தப்புத்தப்பா பேசாதீங்க.. கொந்தளித்த பிக் பாஸ் டைட்டில் வின்னர்!
சென்னை: கடந்த சீசனில் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்து ஆட்டத்தின் போக்கையே மாற்றி பிக் பாஸ் டைட்டிலையே தட்டிச் சென்றார் அர்ச்சனா ரவிச்சந்திர்ன். ரித்விகாவுக்குப் பிறகு பிக் பாஸ் டைட்டில் வின்னரை வென்ற பெண் போட்டியாளராகவும் அர்ச்சனா மாறியிருந்தார். இந்த சீசனில் அவருடைய காதலரான அருண் நிகழ்ச்சிக்கு வந்த நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் தொடர்ந்து அர்ச்சனாவை பற்றி பேசி மற்ற போட்டியாளர்கள் கலாய்த்து வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பொங்கிய அர்ச்சனா பாரதியாரின் "தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி" என்கிற காத்திரமான வரிகளை எல்லாம் பதிவிட்டு இந்த இடத்துக்கு வர நான் தான் முயற்சி செய்து போராடியிருக்கிறேன். மத்தவங்க தயவுல நான் இங்கே வரலை என பேசியிருந்தார்.

உடனடியாக அருணுக்கு எதிராகத்தான் அர்ச்சனா பேசுகிறார் என்றும் அருண் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கேம் ஆடுவது அர்ச்சனாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இருவரும் பிரேக்கப் செய்து பிரியப் போகிறார்களா என்கிற ரேஞ்சில் ஏகப்பட்ட யூடியூபர்கள் வன்மத்தைக் கொட்ட தற்போது அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுத்திருக்கிறார் அர்ச்சனா.
பிக் பாஸ் டைட்டில் வின்னர்: பிக் பாஸ் 8வது சீசன் நிகழ்ச்சியை முதன் முதலாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். 50 நாட்களில் அவருக்கே இந்த நிகழ்ச்சி போர் அடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. வார இறுதி நாட்களில் சிறிது நேரம் வந்து ஷோ நடத்தும் போதே போட்டியாளர்களின் மொக்கை கேமை பார்த்து கடுப்பாகி போகிறார். ஆனால், கடந்த சீசனில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் போது ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பினாலும் நிகழ்ச்சி சூடு பிடித்தது. அதிலும், பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டதும், வைல்டு கார்டு என்ட்ரியான அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனதும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.
அருண் தான் காரணமா?: அர்ச்சனாவை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பியதே அருண் தான் என்றும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் உதவியால் தான் அர்ச்சனாவுக்கு பிக் பாஸ் வாய்ப்பு மற்றும் டிமான்ட்டி காலனி 2 உள்ளிட்ட பட வாய்ப்புகள் கிடைத்ததாக பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், அதையெல்லாம் கேட்டு அப்செட் ஆகிவிட்டார் அர்ச்சனா. தனது ட்விட்டர் பக்கத்தில்,
"தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்றுநினைத் தாயோ?" என பொங்கி தள்ளிவிட்டார்.

அருண் தான் என் உலகம்: அர்ச்சனா ரவிச்சந்திரன் இந்தளவுக்கு அப்செட் ஆகும் அளவுக்கு அப்படி யார் அவரை டிஸ்டர்ப் செய்திருப்பார்கள் என்றும் அருணை அவர் பிரேக்கப் செய்து பிரியப் போகிறாரா? என ஏகப்பட்ட கேள்விகள் கிளம்பிய நிலையில், தற்போது அருண் தான் என் உலகம். நான் அவரை எதிர்த்து எந்தவொரு பதிவையும் போடவில்லை. எங்கள் உறவில் எந்தவொரு விரிசலும் இல்லை. உலகமே அவரை எதிர்த்து நின்றாலும் அவருக்கு துணையாக நான் என்றுமே நிற்பேன் என பதிவிட்டுள்ளார். அர்ச்சனாவின் இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் ஏதோ பெரிய பஞ்சாயத்து போல என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











