பிரியங்கா - மணிமேகலை சண்டை.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா என்ன சொன்னாரு தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் சீசன் 7ன் டைட்டிலை தட்டிச் சென்ற அர்ச்சனா ரவிச்சந்திரன் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான டிமான்ட்டி காலனி 2 படத்திலும் நடித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அதில், பங்கேற்ற போட்டியாளர்கள் அதிகம் சினிமாவில் ஹீரோயின்களாக மாறி நடித்து வருகின்றனர்.
ரைசா வில்சன், யாஷிகா ஆனந்த், லாஸ்லியா, ஷிவானி நாராயணன் வரிசையில் அர்ச்சனா ரவிச்சந்திரனும் விரைவில் ஹீரோயின் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அருண் ராஜ் உடன் இணைந்து அவர் ஆட்டம் போட்டுள்ள டாக்ஸிக் காதல் பாடல் தற்போது வெளியாகி இளைஞர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது.

அந்த பாடலை புரமோட் செய்யும் விதமாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு அர்ச்சனா பேட்டியளித்த நிலையில், அவரிடம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பிரியங்கா மற்றும் மணிமேகலை இடையே வெடித்துள்ள சண்டை பற்றி கேட்ட கேள்விகளுக்கு தனது மனதில் பட்டதை பளிச்சென கூறியிருக்கிறார்.
வெளியேறிய மணிமேகலை: குக் வித் கோமாளி சீசன் இந்த ஆண்டு ஆரம்பித்ததில் இருந்தே ஏகப்பட்ட பஞ்சாயத்துகளை சந்தித்து வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியை நடத்தி வந்த மீடியா மேன்சன் நிறுவனம் சன் டிவிக்கு சென்று டாப் குக்கு டூப் குக்கு என்கிற நிகழ்ச்சியை நடத்தியது. குக் வித் கோமாளியில் இருந்த பலர் அந்த நிகழ்ச்சிக்கு சென்றனர். மணிமேகலை கோமாளியாக வர மாட்டேன் என சொல்லி இருந்த நிலையில், இந்த சீசனுக்கு தொகுப்பாளினியாக வந்தார். ஆனால், தொகுப்பாளினி பிரியங்கா குக்காக மாறிய நிலையில், கடைசி நேரத்தில் இருவருக்கும் இடையே சண்டை வெடித்து மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு இனி வரவே மாட்டேன் எனக் கூறிவிட்டார்.
பிரியங்கா டைட்டில் வின்னர்?: பிரியங்கா தான் இந்த சீசனின் டைட்டில் வின்னராக மாறியுள்ளார் என்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அவர் வந்த போது கூட கடைசி வரை அவரை விஜய் டிவி கொண்டு வந்து ரன்னர் அப் ஆக மாற்றியது. ராஜு ஜெயமோகனுக்கு மக்கள் செல்வாக்கு கிடைக்கவில்லை என்றால் பிரியங்காவையே டைட்டில் வின்னராக மாற்றியிருப்பார் என்றும் நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் கூறி வருகின்றனர்.
அர்ச்சனா கருத்து: குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்று மட்டும் கிடையாது. ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்தாலும் க்ரூப்பிஸம் அங்கேயும் இருக்கத்தான் செய்யும். ஒருவர் டாமினேட் செய்வதும், ஒருவர் வெடித்து சிதறுவதும் இருக்கத்தான் செய்யும். இருவரில் யார் சரி, யார் தவறு என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால், இது போன்ற பிரச்சனைகள் இருப்பது உண்மை தான் எனக் கூறியுள்ளார்.
பிக் பாஸ்க்கு வருகிறாரா மணிமேகலை?: குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடியும் தருவாயில் மணிமேகலை இப்படியொரு பூகம்பத்தை கிளப்பியிருக்கும் நிலையில், பிக் பாஸ் சீசன் 8க்கு வரப்போகிறாரா? அதற்கான பில்டப் டிராமா தான் இவை எல்லாமா? அடுத்த மாதம் பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் சேதுபதி தலைமையில் ஆரம்பிக்க உள்ள நிலையில், விஜய் டிவி மற்றும் விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவை சுற்றி சர்ச்சை வெடிக்க காரணமே இதுதானா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











