45 வயதில் இப்படியா?.. சக போட்டியாளரை பார்த்து பொறாமைப்பட்ட பிக்பாஸ் முத்துக்குமரன்

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் முத்துக்குமரன் டைட்டில் வின்னராகவும், சௌந்தர்யா முதல் ரன்னர் அப்பாகவும் வந்தார்கள். டைட்டில் வின்னரான முத்துக்குமரனுக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்துவருகிறார்கள். இந்தச் சூழலில் அவர் தனது சக போட்டியாளராக இருந்த தீபக்கை பற்றி பேசியிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாகிவருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இதில் முதலில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அப்போது போட்டி ஒன்று பெரிதாக சுவாரஸ்யம் இல்லாமல்தான் இருந்தது. சேதுபதியும் வாரா வாரம் வந்து பேசுகிறேன் என்கிற பெயரில் இழுவையாக இழுக்கிறார் என்கிற விமர்சன குரல்களும் சத்தமாகவே கேட்டன. அதனையடுத்து வைல்டு கார்டு என்ட்ரி மூலம் 6 போட்டியாளர்கள் கூடுதலாக வீட்டுக்குள் சென்றார்கள். இதனால் மொத்தம் 24 போட்டியாளர்கள் என்ற நிலை உருவானது.

bigg boss 8 muthukumaran 8

முத்துக்குமரன்: 24 போட்டியாளர்களில் முத்துக்குமரனுக்கு முதல் நாளிலிருந்தே மக்களின் கவனம் இருந்தது. அவர் பேசியது, நடந்துகொண்டது என அனைத்துமே பலரையும் கவர்ந்தது. அதேபோல் சௌந்தர்யாவுக்கு என்றும் தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இதன் காரணமாக இவர்கள் இரண்டு பேரில் யாராவது ஒருவர்தான் பிக்பாஸ் சீசன் 8ன் டைட்டில் வின்னராக வருவார்கள் என்று ஆரம்பத்திலிருந்தே பலரும் கணித்து ஆரூடம் சொல்ல தொடங்கினார்கள் என்பது நினைவுகூரத்தக்கது..

டைட்டில் வின்னர்: சூழல் இப்படி இருக்க மொத்தம் இருந்த 24 போட்டியாளர்களில் முத்துக்குமரன், சௌந்தர்யா, ரயான், விஷால், பவித்ரா ஆகிய மூன்று பேர் இறுதிக்கட்டத்துக்கு முன்னேறினார்கள். அவர்களில் முத்துக்குமரன் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சௌந்தர்யா முதல் ரன்னர் அப்பாக வந்தார். டைட்டில் வென்ற முத்துவுக்கு 40 லட்சத்து 50,000 ரூபாய் பரிசு தொகை சென்றது. மேலும் பணப்பெட்டி டாஸ்க்கில் அவர் எடுத்த 50,000 ரூபாய், 106 நாட்களுக்கான சம்பளம் என மொத்தம் 50 லட்சத்துக்கும் மேல் தொகை சென்றது.

குவியும் வாழ்த்து: டைட்டில் வின்னராக வந்த பிறகு பேசிய முத்துக்குமரன், 'இந்தப் பணத்தை வைத்து கடன் இல்லாமல் நான் வீடு கட்டுவேன். சமூகத்துக்கு தேவையான விஷயங்களுக்காக இந்தப் பணத்தை நான் செலவழிப்பேன். இந்த வெற்றி எனது தாய்க்கு சமர்ப்பணம்' என்று எமோஷனலாக பேசினார். சௌந்தர்யா வழக்கம்போல் கலகலப்பாக பேசினார். இவர்கள் இரண்டு பேருமே தங்களது இயல்பை இழக்கவில்லை என்று ரசிகர்கள் மகிழ்ச்சியோடு கூறி வாழ்த்து தெரிவித்தார்கள்.

முத்துக்குமரன் வீடியோ: இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் தனது சக போட்டியாளராக இருந்த தீபக்கை முத்துக்குமரன் சந்தித்திருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில், "நான் ரயான், விஷால் என எல்லோரையும் முந்தி ஓடிவிட்டேன். ஆனால் தீபக்கை மட்டும்தான் முந்த முடியவில்லை. 45 வயதில் இந்த மனிதன் எப்படி இப்படி இருக்கிறார் என்று கோபம்தான் வருகிறது. அதேபோல் தீபக்கின் யோகா டீச்சர் யாருங்க?.. அவங்களைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன்" என்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X