»   »  கஞ்சா கருப்பு, சினேகனுடன் மல்லுக்குப் பாய்ந்த ஓவியா: ஜூலிக்கு ரெஸ்டு போல

கஞ்சா கருப்பு, சினேகனுடன் மல்லுக்குப் பாய்ந்த ஓவியா: ஜூலிக்கு ரெஸ்டு போல

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸில் ஓவியா சினேகன் மற்றும் கஞ்சா கருப்புடன் சண்டை போடுவது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாஸன் தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சியில் நமீதா, ஓவியா உள்பட 15 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று இரவு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

ஓவியா

ஓவியா

ரூல்ஸ், ரூல்ஸ் என்று சொல்லி உயிரை எடுக்காதீங்க என்று ஓவியா பிக் பாஸ் வீட்டு தலைவர் சினேகனிடம் கூற அவர் டென்ஷனாகி லீடர் சொன்னால் கேட்கணும் என்கிறார்.

முட்டாள்

முட்டாள்

நீங்க புத்திசாலி நான் முட்டாளா என்று சினேகன் ஓவியாவிடம் கேட்கிறார். அதை நீங்க தான் முடிவு செய்யணும் என்கிறார் ஓவியா. ஏம்மா ஏய் அவுங்க தான் பேசிக்கிட்டு இருக்காங்கள்ல என்று கஞ்சா கருப்பு கூற ஓவியா நீங்க ஷட் அப் பண்ணுங்க என்கிறார்.

கஞ்சா கருப்பு

கஞ்சா கருப்பு

ஓவியா பேச்சை கேட்டு கடுப்பான கஞ்சா கருப்பு என்னம்மா ஷட் அப் பண்ணுன்னு என்று சண்டைக்கு பாய்கிறார். பார்த்தாலே தெரிகிறது சொல்லிக் கொடுத்து சண்டை போட வைத்துள்ளனர் என்று.

நெட்டிசன்ஸ்

ஓவியாவால் தான் பிக் பாஸில் என்டர்டெயின்மென்டாக உள்ளது என்று ஆளாளுக்கு சமூக வலைதளங்களில் தெரிவித்து வருவதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பார்த்துவிட்டு அவரை வைத்தே சண்டையை ஆரம்பித்துள்ளனர். சூப்பரப்பு!

English summary
Bigg Boss promo video is showing Oviya fighting with Snehan and Ganja Karuppu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil