அதென்ன பெரிய யாஷிகா, அப்போ நான் எதுக்கு இருக்கேன்?: களத்தில் குதித்த பிக் பாஸ்
Recommended Video

சென்னை: அது என்ன யாஷிகா செய்வது என்று பிக் பாஸே நேரடியாக களத்தில் குதித்துவிட்டார்.
பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து கடந்த வாரம் நியாயப்படி ஐஸ்வர்யா வெளியேறியிருக்க வேண்டும். ஆனால் நாம் போட்ட ஓட்டுகளை எல்லாம் செல்லா ஓட்டுகளாக்கி ஐஸ்வர்யாவை காப்பாற்றிவிட்டார் பிக் பாஸ்.
இருக்கவே இருக்கிறார் ஏமாளி சென்றாயன் என்று நினைத்த பிக் பாஸ் அவரை விரட்டிவிட்டார். ஆம், விரட்டிவிட்டார் என்றே கூற வேண்டும்.

சென்றாயன்
ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டது குறித்து கமல் பிக் பாஸ் போட்டியாளர்களிடம் கேட்டார். அது ஆச்சரியமாக தான் உள்ளது. ஆனால் மக்களின் கருத்தை ஏற்கிறேன் என்று ஜனனி கூறினார். நேரடியாக பாதிக்கப்பட்டவன் நான் தான். பொய் சொல்லி என்னை ஏமாற்றி அதை யுக்தி என்று சொன்னார். அதனால் மன வருத்தம் உள்ளது. என்னை பொறுத்த வரை ஐஸ்வர்யா இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று கமலிடம் கூறினார் சென்றாயன்.

தலைவி
ஐஸ்வர்யா நாமினேட் செய்யப்பட்ட வாரம் பார்த்து சரியாக யாஷிகா பிக் பாஸ் வீட்டின் தலைவியாக இருந்தார். முன்பு ஒரு முறை ஐஸ்வர்யா நாமினேட் செய்யப்பட்டபோதும் வீட்டின் தலைவியான யாஷிகா அவரை காப்பாற்றினார். தற்போது அப்படித் தான் நடக்கும் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் பிக் பாஸ் ரூட்டை மாற்றி அவரே களத்தில் குதித்துவிட்டார்.

போலி
ஐஸ்வர்யாவுக்கு பார்வையாளர்கள் போட்ட ஓட்டுகள் என்று கூறி கமல் காட்டிய கணக்கு போலி என்று மக்கள் மட்டும் அல்ல முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் கூட கருதுகிறார். பிக் பாஸ் அணியே ஓட்டு போட்டுவிட்டு அதை பார்வையாளர்கள் போட்டதாக போலிக் கணக்கு காட்டிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது போலி கணக்கு என்று தெரிந்தும் கமல் பார்வையாளர்கள் மீது மீண்டும் மீண்டும் பழிபோட்டதை ஏற்க முடியவில்லை. நீங்கள் ஒழுங்காக ஓட்டு போட்டிருந்தால் இப்படி நடந்திருக்குமா என்று அவர் திரும்பத் திரும்ப கூறி பார்வையாளர்களின் கோபத்திற்கு ஆளானார்.

செல்லக்குட்டி
கடந்த முறை போன்று இல்லாமல் இந்த முறை நானே ஐஸ்வர்யாவை காப்பாற்றுவேன் என்று தில்லாலங்கடி வேலை பார்த்துவிட்டார் பிக் பாஸ். டிஆர்பிக்காக ஐஸ்வர்யா அந்த வீட்டில் இருக்க வேண்டும் என்று நிகழ்ச்சியின் டைரக்டர் விரும்புவதாக முன்னாள் போட்டியாளர் காஜல் தெரிவித்துள்ளார். இதையடுத்து யாருய்யா அந்த டைரக்டர் என்று ஆளாளுக்கு விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











