திரும்பவும் சந்திரலேகா.. விஜய் டிவிக்கு பெப்பே காட்டி விட்டு சன் டிவிக்கு சென்ற வனிதாக்கா!

பிரபல நடிகை வனிதா சன் டிவியின் சந்திரலேகா சீரியலில் நடிக்கிறார்.

Recommended Video

Vanitha in Chandraleka Serial:வில்லியாக களமிறங்கிய வனிதா

சென்னை: நடிகை பிக் பாஸ் வனிதா சீரியலில் நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை களைகட்ட வைத்தவர் நடிகை வனிதா. எத்தனையோ போட்டியாளர்கள் இருந்திருந்தாலும், வனிதாவால் தான் நிகழ்ச்சி சர்ச்சையாகவும், சுவாரஸ்யமாகவும் சென்றது.

Bigg boss Vanitha acting in Sun TV Chandraleka serial

அதனால் தான் கடைசி இரண்டும் வாரங்கள் முன்பு வரை வனிதாவை வீட்டிலேயே வைத்திருந்தார் பிக் பாஸ். போட்டியாளர்களை வாண்டடாக வம்புக்கு இழுத்து ரணகளப்படுத்திய வனிதாவுக்கு பல லக்கி பரிசுகள் கிடைத்து வருகின்றன.

அந்த வகையில் பிக் பாஸ் மூலம் மீண்டும் லைம் லைட்டுக்கு வந்திருக்கும் வனிதாவுக்கு, திரைப்பட மற்றும் நாடகங்களில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றனவாம். இதன் மூலம் அவர் தனது 2வது இன்னிங்கிஸை தொடங்கியிருக்கிறார்.

வனிதா சீரியலில் வில்லியாக நடிக்க உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியாகியது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தான் அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் அது பொய்யாகி விட்டது.

இந்நிலையில் வனிதா சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா சீரியலில் நடித்துள்ளது உறுதியாகியுள்ளது. அதில் அவர் முக்கிய திருப்புமுனையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். வரும் செவ்வாய் முதல் வனிதா சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா தொடர், சீரியல் பிரியர்களிடையே மிகவும் பிரபலமானதாகும். இத்தொடரில் நாயகன் மற்றும் நாயகிக்கு இக்கட்டான சூழலில் உதவ வரும் கேரக்டர் வனிதாவுக்கு. சீரியலிலும் அவர் வனிதாவாகவே நடிக்க இருக்கிறாராம்.

நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியின் மூத்த மகளான வனிதா, 1995ம் ஆண்டு வெளிவந்த சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமானார். தற்போது சின்னத்திரையிலும் அதே சந்திரலேகா மூலம் தான் வனிதா அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் வனிதாவுக்கென்று தனி ரசிகர் வட்டம் ஒன்று உருவாகி விட்டது. அவரது தைரியமான பேச்சுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. வனிதாவின் சீரியல் பிரவேசம் அவர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. எனவே வனிதா நிச்சயம் சின்னத்திரையில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Read more about: vanitha வனிதா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X