சீரியல் வில்லியாகும் வனிதாக்கா.. இனி ஆட்டம் வெறித்தனமா இருக்கும்ல.. தினம் தினம் தீபாவளி தான்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிகை வனிதா வில்லியாக நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
Recommended Video
சென்னை: நடிகை பிக் பாஸ் வனிதா ஒரு பிரபல மெகா சீரியலில் வில்லியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 3யின் டிஆர்பிக்கு கேரண்டி தந்தவர் நடிகை வனிதா. அதனால் தான் வெளியே சென்றவரை மீண்டும் உள்ளே அழைத்து வந்து விளையாடவிட்டார் பிக் பாஸ். போட்டியாளர்களை வாண்டடாக வம்புக்கு இழுத்து ரணகளப்படுத்தினார் வனிதா.
வனிதாவை நம்பியார் ரேஞ்சுக்கு வில்லியாக்கி திட்டி தீர்த்தனர் ரசிகர்கள். அவருக்கு வத்திக்குச்சி என பட்டப்பெயரும் வைக்கப்பட்டது.

பிக் பாஸ் வில்லி
பிக் பாஸ் வீட்டில் வனிதா இருந்த போது தினம் தினம் குட்டி கலாட்டாக்களை செய்து வந்தார். அவருக்கு போட்டியாக கஸ்தூரி இருப்பார் என நினைத்தார்கள். ஆனால் அதுவும் வனிதாவிடம் எடுபடவில்லை. யாரையும் பேசவிடாமல் தான் மட்டுமே பேசி பேசி அசால்ட் செய்தார்.

வில்லி டு அன்னை
சினிமாவில் இருந்த போது கிடைக்காத பப்ளிசிட்டி, பிக் பாஸ் எனும் ஒரு நிகழ்ச்சி மூலம் வனிதாவுக்கு கிடைத்துவிட்டது. பிக் பாஸ் வீட்டில் வனிதா வில்லியாக சித்தரிக்கப்பட்டாலும், இரண்டாவது முறை வெளியே சென்றபோது அன்பான அன்னையாக அவரது இமேஜை உயர்த்தி வழியனுப்பி வைத்தார் பிக் பாஸ்.

வனிதா ஆர்மி
இப்போது வனிதாவுக்கு என ஒரு பெரிய ரசிகர் கூட்டமே சமூக வலைதளங்களில் இயங்கி வருகிறது. கவின் ஆர்மி, லாஸ்லியா ஆர்மி, கஸ்தூரி ஆர்மி, தர்ஷன் ஆர்மி என எத்தனை ஆர்மிகள் படையெடுத்து வந்தாலும், சிங்கிளாக நின்று யுத்தம் செய்கிறது வனிதா ஆர்மி.

புதிய வாய்ப்பு
மீண்டும் லைம்லைட்டுக்கு வந்துவிட்ட வனிதாவுக்கு இது அறுவடைகாலம். தனது கிடைக்கும் வாய்ப்புகளை வரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். சமீபத்தில் கூட தான் புதிய பயணத்துக்கு தயாராகிவிட்டதை டிவிட்டரில் அறிவித்திருந்தார்.

சீரியல் வில்லி
இந்நிலையில் வனிதா சீரியலில் வில்லியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அவர் நடிக்க இருக்கிறாராம். விரைவில் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பாகும் என தெரிகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்
விஜய் தொலைக்காட்சியில் கடந்த பல மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் நெடுந் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் வனிதாவும் சேர்ந்துவிட்டால், இனி கேட்கவா வேண்டும். ரசிகர்களுக்கு இனி தினம் தினம் தீபாவளி தான்.

விரைவில் அறிவிப்பு
இதுகுறித்து விஜய் தொலைக்காட்சியோ, வனிதாவோ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடவில்லை. வனிதா ஏற்கனவே சூசகமாக இதுபற்றி அறிவித்திருந்தார். எனவே விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











