Vanitha: ப்பா.. இந்த வயசுல இப்படி ஒரு போஸ்.. வனிதாவை கலாய்க்கும் பேன்ஸ்!

சென்னை: விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் வித்தியாசமான உடையில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ள பதிவு இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

விஜயகுமார் மஞ்சுளா தம்பதியினரின் மூத்த மகளான வனிதாவிற்கு பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லை. இவர், தளபதி விஜய்யோடு சந்திரலேகா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். இந்த படத்தில் இடம் பெற்ற அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் என்ற பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதை தொடர்ந்து சில திரைப்படங்களில் கதாநாயகி ஆக நடித்து வந்த நேரத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

Bigg boss Vanitha Vijayakumar instagram post trending on social media 03-04-2024

விஜயகுமார் மகள்: ஆனால் வனிதாவின் திருமண வாழ்க்கை நிலைக்கவில்லை. மாறாக தொடர்ந்து 2 திருமணங்கள் செய்தார். அதுவும் பிரிவில் முடிந்தது. கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த வனிதா, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பெரிய அளவில் பிரபலமானார். வனிதாவிற்கு அவருடைய அப்பா விஜயகுமாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இப்போது வரை வனிதாவை யாரும் கண்டுகொள்ளவில்லை. நடிகை வனிதா தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.

விஜயகுமார் பேத்தி: விஜயகுமார் முத்துக்கண்ணு தம்பதியினரின் மகளான அனிதா விஜயக்குமாரின் மகள் தியாவிற்கு கடந்த மாதம், மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணம் தடபுடலாக நடைபெற்றது. சங்கீத் மற்றும் மெஹத்தி பங்ஷன், ரிஷப்ஷன் தடபுடலாக நடைபெற்றது இதில், விஜயகுமார், கவிதா விஜயகுமார், அருண் விஜய், ப்ரீத்தா, ஸ்ரீதேவி என ஒட்டுமொத்த குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். ஆனால்,வனிதாவை ஒட்டுமொத்த குடும்பமும் ஒதுக்கி வைத்தது.

விதவிதமான போட்டோ: இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஏராளமான பாலோவர்களை வைத்து இருக்கும், இவர், வித்தியாசமான போட்டோஷூட் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோவைப் பார்த்த நெட்டிசன்ஸ் பலர், ஹோட்டலுக்கு என்ன சர்வரா போறீங்களா கேட்டு வருகின்றனர். இந்த போட்டோவிற்கு ஏராளமான பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X