Summer Special: “ஆமையுடன் ஜாலி குளியல்”.. பிக் பாஸ் நடிகையின் பாலி தீவு அட்ராசிட்டி!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை வர்ஷினி வெங்கட். இவர் அந்த வீட்டில் குறைந்த நாட்களே இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இயற்கையின் மீது அதீத காதல் கொண்ட வர்ஷினி, பாலி தீவில் கடலுக்கு ஸ்நோர்கெலிங் (Snorkeling) சென்று இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
சென்னையில் பிறந்த மாடல் அழகியான வர்ஷினி வெங்கட்டிற்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருப்பதால், எப்போதும் உடலை கட்டுக்கோப்புடன் வைத்து இருப்பதற்காக அவ்வப்போது உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். தொகுப்பாளராக இருந்த இவர், பல்வேறு தொலைக்காட்சிகளில் பணியாற்ற உள்ளார். அதோடு மட்டுமில்லாமல் ஒரு சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். நடிகை வர்ஷினி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "கண்ணான கண்ணே" சீரியல் நடித்து பிரபலமானார். பிரித்வி ராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த இந்த தொடர் இல்லத்தரசிகளுக்கு பிடித்தமான சீரியல் ஆகும்.

நடிகை வர்ஷினி வெங்கட்: அதன்பின், விஜய் டிவிக்கு வந்த வர்ஷினி பிக் பாஸ் சீசன் 8ல் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டார். வீட்டிற்கு வந்த சில நாட்களிலே விளையாட்டை சிறப்பாக விளையாடிய வர்ஷா, யாருக்கும் பயப்படாமல் தனது கருத்தை தைரியமாக வெளிப்படுத்தினார். ஆனால், வீட்டிற்கு வந்த மூன்றே வாரத்திலேயே அதாவது 21 நாளில், நாமினேஷனில் சிக்கி குறைந்த வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வர்ஷினி வெங்கட், டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் நடித்தார். மேலும் ஒரு படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.
ஆமையுடன் குளியல்: சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் வர்ஷினி தற்போது, சென்னையில் வெயில் கொளுத்துவதால் பாலி தீவுக்கு ஜாலி ட்ரிப் சென்றுள்ளார். பாலி தீவில் ஸ்நோர்கெலிங் (Snorkeling) சென்று இருக்கும் வர்ஷினி, கடலில் ஆமையுடன் நீச்சல் அடித்து மகிழ்ந்துள்ளார். அந்த வீடியோவை வர்ஷினி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கொடுத்து வைத்த ஆமை என்றும், துணிச்சலான பெண் என கமெண்ட் பாக்ஸில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
`


Click it and Unblock the Notifications