ஐஸ்வர்யாவை குஷிபடுத்த மீண்டும் விதியை மீறிய பிக் பாஸ்: என்ன செய்தார் தெரியுமா?
Recommended Video

சென்னை: பிக் பாஸ் நீங்கள் மட்டும் விதிமுறைகளை மீறலாமா?
பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு வெளி உலகில் என்ன நடக்கிறது என்பதே தெரியக் கூடாது என்பது விதி. முதல் சீசனில் இருந்தவர்கள் அப்படித் தான் வெளி உலக விஷயமே தெரியாமல் இருந்தனர்.
இந்நிலையில் இந்த சீசனில் பிக் பாஸே அந்த விதியை மீறிவிட்டார்.

பிக் பாஸ்
பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த குடும்பத்தினரில் பலர் மும்தாஜை ரொம்ப பிடிக்கும் என்று தெரிவித்தனர். சென்றாயன் மனைவி கயல்விழியோ மும்தாஜ் மேடம் எங்கே என்று கேட்டு அவர் இருக்கும் அறைக்கு சென்று பார்த்தார். குடும்பத்தாரின் செயல்களை பார்த்த பிற போட்டியாளர்கள் மும்தாஜை தான் மக்களுக்கு பிடித்துள்ளது என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.

கவலை
மும்தாஜை பார்வையாளர்களுக்கு பிடித்துள்ளது என்பதை அறிந்து ஐஸ்வர்யா கவலை அடைந்தார். இந்நிலையில் பிக் பாஸ் விதியை மீறி பார்வையாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை போட்டியாளர்களுக்கு போட்டுக் காட்டினார். அதிலும் அவர் ஓரவஞ்சனை செய்துள்ளார். ஐஸ்வ்ரயாவை பாராட்டுவதை மட்டும் போட்டுக் காட்டியுள்ளார். ஐஸ்வர்யாவை பெரும்பாலானோர் திட்டிக் கொண்டிருக்கும்போது இப்படி உல்டாவா காட்டி அந்த புள்ளையை ஏமாற்றியுள்ளார் பிக் பாஸ்.

நன்றி
தன்னை பார்வையாளர்கள் புகழ்ந்தை பார்த்த ஐஸ்வர்யா உண்மை அது தான் என்று தவறாக புரிந்து கொண்டு நன்றி தமிழ் மக்களே என்றார். மேலே வானத்தை பார்த்துக் கொண்டு நன்றி கடவுளே என்றார். அந்த வீடியோவை பார்த்த சந்தோஷத்தில் ஐஸ்வர்யா டான்ஸ் வேறு. உண்மை தெரிந்தால் தம்மடிக்கும் அறையில் உட்கார்ந்து கதறி அழுவார். அவர் முகத்தில் சிரிப்பை பார்க்கவே பிக் பாஸ் விதியை மீறியுள்ளார் போன்று.

நல்லா இருக்கும்
பைனல்ஸ் வரைக்கும் போக வேண்டும். அப்படி போனால் நன்றாக இருக்கும் என்று கூறி ஐஸ்வர்யா டான்ஸ் ஆடினார். சும்மாவே பிக் பாஸ் ஐஸ்வர்யாவை காப்பாற்றுவார். தற்போது அவரின் செல்லக்குட்டியே வாய் திறந்து பைனல்ஸ் போக வேண்டும் என்று கூறிவிட்டது. அதனால் நிச்சயம் ஏதாவது ஒரு வழியில் ஐஸ்வர்யாவை காப்பாற்றிவிடுவார். நீங்கள் இப்படி எல்லாம் செய்வதால் தான் பிக் பாஸ் பார்வையாளர்கள் உங்களை கலாய்க்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











