வியானாவிடம் மோசமாக நடந்து கொண்ட கானா வினோத்.. மரியாதையை கெடுத்துக்காதீங்க.. என்ன நடந்தது!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் எதிர்பாராத ட்விஸ்ட்டுடன் சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் முகம் சுழிக்க வைக்கும் அளவுக்கு காட்சிகளும் அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கிறது. தற்போது வியானா, கானா வினோத் என்னிடம் மோசமாக நடந்து கொண்டார் என குற்றம்சாட்டி உள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில், முந்தைய சீசன்களை விட காதல் தான் அதிகமாக உள்ளது. ஒரு பக்கம் பார்வதி, கம்ருதீன் மற்றொரு பக்கம் FJ, வியானா. FJ ஆரம்பத்தில் ஆதிரையுடன் நெருங்கி பழகினார். இவர்கள் இருவரும் ஒன்றாக வீட்டை சுற்றி வந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஆதிரை வெளியேற்றப்பட்டார். அதன்பின் FJவுடன் வியானா நெருங்கி பழகி வருகிறார். இந்த ஜோடி கடந்த வாரம் முழுக்க தனியாக பல இடத்தில் சுற்றித் திரிந்தார்கள்.

Bigg Boss Viyana Gana Vinoth
Photo Credit:

வியானா: கடந்த வாரம் நடந்த ஸ்கூல் டாஸ்க்கில் வியானா பள்ளி மாணவி போல வந்து பல சேட்டைகளை செய்தார். இதைப்பார்த்த விஜய்சேதுபதி , உங்களின் சேட்டை நன்றாக இருந்தது என்று கூறினார். அதே நேரம், பிக் பாஸ் வீட்டிற்கு எதற்காக வந்தீங்க என்பதை மறந்துவிட்டீங்க என சொல்லி FJ, வியானா காதல் சேட்டையை கண்டித்தார். அதே நேரம்
நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்த ஆதிரை மீண்டும் உள்ளே அனுப்பி உள்ளனர். இதனால், FJ - வியானா ஜோடிக்கு சண்டை வருமா என பார்வையாளர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

கானா வினோத்: இந்நிலையில், இன்றைய டாஸ்க்கின் போது, கானா வினோத், கையை பிடித்து இழுத்தார். நான் வலியில் கத்திய போது அவர் விடவில்லை, பாருங்க விரலில் அடிபட்டு இருக்கு என்று வீட்டுத்தல சபரியிடம் புகார் கூறுகிறார். அதோடு மட்டுமில்லாமல், அனைவர் முன்பும் பேசிய வியானா பிசிகல் வயலேன்ஸ் அதாவது (உடல் ரீதியான வன்முறை) எனக்கும் நடந்தது. நீங்க பெரிய ஆள் என நினைத்து, பெண்கள் மீது கை வைத்தால், எதிரில் இருப்பவர்கள் சும்மா தட்டி விட்டாலும், உங்களின் மரியாதையை நீங்களே கெடுத்துக்கொள்வது போல ஆகிவிடும். இந்த நிகழ்ச்சிக்கு மதிப்பு கொடுத்துத்தான் யாரும், யார் மீது கை வைக்காமா இருக்காங்க.

வினோத் பாவம்: எல்லாராலையும் கை வைக்க முடியும்,பொண்ணுங்களும் கை வைக்க முடியும், யாருக்கும் தைரியும் இல்லை என்று நினைக்காதீங்க,உங்களுக்கு என்ன டாக்ஸ் கொடுத்து இருக்காங்களோ அந்த டாக்சை பண்ணுங்க என்று வியானா நேரடியாகவே பேசிவிட்டார். இத்தனை நாட்களாக வீட்டில் மேக்கப் ராணி போல சுற்றிவந்த வியானா இப்படி பேசியதை பார்த்து இவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி உள்ளனர். ஆனால், கானா வினோத்தின் ஆதரவாளர்கள் சிலர், வியானாவிற்கு வினோத்தை பிடிக்காது, அதனால் தான் தேவையில்லாமல் அவரை டார்க்கெட் செய்கிறார் என்றும், கடந்த வாரமே வியானா குறைந்த வாக்குகளை பெற்று கடைசி லிஸ்டில் இருந்தார், அப்போதே அவர் வெளியே போய் இருக்க வேண்டும், எவிக்ஷன் இல்லாததால் தப்பித்தார். அதற்காகத்தான் இப்படி இல்லாததை எல்லாம் சொல்லி வருகிறார் என ஒரு சிலர் வியானாவை திட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X