பிக்பாஸ் டைட்டில் வின்னர் பார்வதியா? ஜென்மத்துக்கும் திருந்தமாட்டங்கனு விமர்சிக்கும் நெட்டிசன்கள்

சென்னை: கடந்த வாரத்தில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9இன் கடைசி எபிசோட் ஒளிபரப்பட்டது. இந்த சீசனில் வைல்ட் கார்டு போட்டியாளராக சென்ற திவ்யா கணேஷ் இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆனார். இந்த சீசனில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் முடிந்ததும், போட்டியாளர்கள் பார்வதி மற்றும் கமருதீன் என இருவரும் வெளியேற்றப்பட்டனர். இது ரசிகர்கள் பலரால் வரவேற்கப்பட்டது. மேலும், சிலரால் கடும் விமர்சனத்திற்கு ஆளாக்கப்பட்டது.

இப்படி இருக்கையில் பார்வதி மற்றும் கமருதீன் இணைந்து ரசிகர்களை சந்தித்தனர். இந்த சந்திப்புக்காக பார்வதிக்கு சிறப்பு வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதேபோல் பார்வதி மற்றும் கமருதீனுக்கு மாலை அணிவித்து அவர்களை மேடையில் ஒருங்கே ஆடவும் வைத்தனர். இதைப் பார்த்த பலரும் இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று குழம்பிப் போனார்கள்.

Bigg Boss VJ Parvathy Honored As BB Title Winner at Fan Meet Netizens Slams Badly

இப்படி இருக்கையில் இந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் இணைந்து, பார்வதிக்கு டைட்டில் வின்னர் என்ற பட்டத்தைக் கொடுத்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த இணையவாசிகள் சிலரோ, பார்வதி ஜென்மத்திற்கும் திருந்த மாட்டாங்க போல, பிக்பாஸ் டைட்டில் ஏற்கனவே திவ்யாவுக்கு கொடுக்கப்பட்டுவிட்டது. அப்படி இருக்கையில், இந்த விளம்பரம் தேவையா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் சிலரோ, இந்த நிகழ்ச்சியில் மொத்தமாகவே 34 பேர் தான் கலந்து கொண்டனர். அதில் ரசிகர்கள் என்று பார்த்தால் வெறும் 12 பேர் தான். மீதி எல்லாம் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X