டே ஷிஃப்ட், நைட் ஷிஃப்ட் பேசிய பார்வதியின் ஆபாச சிந்தனை.. விஜய் சேதுபதி இதையெல்லாம் கேட்பீங்களா?
சென்னை: இந்த பிக் பாஸ் சீசனில் பரிதாபத்திற்குரிய நபர்கள் என்றால் அது பிக்பாஸ், விஜய் சேதுபதி மற்றும் பிக்பாஸ் குழுவினர் தான். ரசிகர்களுக்கு கூட ரிமோட் என்ற ஆப்ஷன் இருக்கிறது. ஆனால் அவர்களுக்கோ எந்த ஆப்ஷனும் இல்லை, இந்த சீசன் போட்டியாளர்கள் செய்யக் கூடிய எல்லாவற்றையும் பார்த்து சகித்து கடக்க வேண்டிய சூழலில் இருக்கிறார்கள். இதில் என்னவென்றால், வீக் எண்டில் வரும் விஜய் சேதுபதி நிலைமையை நினைத்தால் இன்னும் பரிதாபமாக இருக்கிறது. ஆனால் வேறு வழி இல்லை, ஒட்டுமொத்த பிக் பாஸ் குழுவுக்கும் இந்த சீசன் சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்ட சீசனாக தான் உள்ளது என்றே கூறலாம்.
சரி, நவம்பர் 13ஆம் தேதி எபிசோட் மற்றும் 14ஆம் தேதி எபிசோட்களில் நடைபெற்ற சம்பவங்களில் விஜய் சேதுபதி இது குறித்து கேள்வி எழுப்புவாரா என்றும், இதற்கு விஜய் சேதுபதியின் ரியாக்ஷன் என்னவாக இருக்கப்போகிறது என்றும் ரசிகர்கள் மத்தியில் இயல்பாகவே கேள்வி எழுகிறது. அதாவது 13ஆம் தேதி எபிசோடில் நடைபெற்ற கற்களை அடுக்கும் டாஸ்க் நடைபெற்றது. அப்போது அரோரா சக போட்டியாளர்களுக்கு ஐடியா கொடுக்கும் விதமாக இரண்டு கற்களை கிடைமட்டமாகவும், அவற்றுக்கு நடுவே ஒரு கல்லை செங்குத்தாகவும் நிறுத்தி, இது போலவும் முயற்சி செய்யுங்கள் என்று கூறினார்.

இதைப் பார்த்ததும் நடுவராக இருந்த பார்வதி, "என்ன குறியீடு காட்டுகிறீர்கள் நீங்கள் ( அரோரா)? உங்கள் மனதில் இருப்பதை எல்லாம் இப்படித்தான் வெளிப்படுத்துவீர்களா? இப்படி கேவலமான எண்ணம் தான் உங்களுடையது" என்று பேசினார். இதற்கு 14ஆம் தேதி எபிசோடில் பார்வதியிடம் விளக்கம் கேட்டதற்கு, " என்னுடைய பார்வையில் அரோரா வைத்த கற்களைப் பார்க்கும்போது தவறான குறியீடாகத்தான் இருந்தது. இரண்டு செங்கற்களை கிடைமட்டமாக வைத்து, நடுவில் ஒரு செங்கல் வைத்திருந்தார்கள். அதற்கு அரோரா விளக்கம் கொடுக்கலாம். ஆனால் எனக்கு அது தவறாக தான் தெரிந்தது என்று கூறுகிறார். திவாகரோ அது ஆபாசக் குறியீடு என்று கூறுகிறார்.
அவதூறு:இவர்களின் வாதம் அரோரா மீதான காழ்ப்புணர்வின் வெளிப்பாடாகத்தான் இருக்கிறது. அப்படியே இருந்தாலும், வாதிட்டு வெல்ல தெரியாதவர் அவதூறைக் கையில் எடுப்பார் என்று பெரியார் கூறியது போல் தான் இந்த இடத்தில் பார்வதி அவதூறை கையில் எடுத்துள்ளார். இது பார்வதியின் கேவலமான சிந்தனையை வெளிப்படுத்துகிறது. இதற்கு தர்பூசணி திவாகர் ஒத்து ஊதிக் கொண்டு இருக்கிறார்.

தவறான பிம்பம்: தனது பார்வைக்கு ஆபாசமாக தெரிகிறது என்றால், அதை தனிப்பட்ட முறையில் அரோராவிடம் கேட்டிருக்கலாம். ஆனால், அவர் அதைப் பொதுவில் பேசி, அரோராவின் மீது தவறான பிம்பத்தை கட்டமைக்க முயல்கிறார். இரண்டு கற்களுக்கு நடுவே ஒரு கல்லை வைத்தது ஆபாசம் என்றால், பிக் பாஸ் வீட்டில் அப்படி இரண்டு பொருட்களுக்கு நடுவே ஒரு பொருளை பல இடங்களில் வைத்திருப்பார்கள். அதைப் பார்க்கும்போது எல்லாம் ஆபாசமாகத் தெரியவில்லை பார்வதிக்கு? சில வாரங்களுக்கு முன்னர் கம்ரூதினிடம் உனக்கு இரண்டு பேர் கேட்கிறார்களா? அப்படியானால் யார் டே ஷிஃப்ட் யார் நைட் ஷிஃப்ட் என்று கேட்டு சிரித்தவர் பார்வதி. பார்வதியின் இந்த பேச்சு எந்த நீதி நெறி நூலில் இருந்து எடுக்கப்பட்ட முத்துக்கள் என்று கேள்வி எழுப்பலாம் அல்லவா?
கேள்வி எழுப்புவாரா சேதுபதி: ஏற்கனவே பிக் பாஸ் ரசிகர்கள் பெரும்பான்மையானவர்களை கடுப்பேற்றி கொண்டு இருக்கிறார் பார்வதி. பிக்பாஸுமே கூட பல நேரங்களில் கடுப்பாகி உள்ளார். ஆனால் போகிற போக்கில் தனது மனதில் உள்ள வன்மத்தை வெளிப்படுத்த, ஒரு போட்டியாளரை தவறாக சித்தரிப்பது என்பது எந்த வகையில் விஜய் சேதுபதி கையாள்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











