இந்த பிக் பாஸும் திருந்த மாட்டார், நாமும் திருந்தவே மாட்டோம்
Recommended Video

சென்னை: பிக் பாஸும் திருந்தப் போவது இல்லை, நாமும் திருந்துவது மாதிரி தெரியவில்லை.
பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு துவங்கப்பட்டபோதே இதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று பகலில் தூற்றிவிட்டு இரவில் சரியான நேரத்தில் பார்த்தவர்களே அதிகம்.
இந்த சீசன் மொக்கையாக இருக்கிறது என்று குறை சொல்லிக் கொண்டே தினமும் பார்க்கிறோம்.

நிகழ்ச்சி
பிக் பாஸ் ப்ரொமோ வீடியோக்களை பார்த்தால் ப்ப்பா சான்சே இல்லை இன்று இரவு நிகழ்ச்சி செமயாக இருக்கும் போல என்று நம்பும் அளவுக்கு அசத்தலாக இருக்கும். இரவு டிவியில் நிகழ்ச்சியை பார்த்தால் டேய், ப்ரொமோவில் இருந்த பரபரப்பு எங்கடா என்று ஏமாந்து நொந்த நாட்களே அதிகம். அந்த அளவுக்கு ப்ரொமோவுக்கும், நிகழ்ச்சிக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.

வைஷ்ணவி
நேற்றைய ப்ரொமோ வீடியோவை பார்த்தபோது டேனியும், வைஷ்ணவியும் ஆக்ரோஷமாக சண்டை போடுவது போன்று இருந்தது. இரவு அந்த சண்டையை எதிர்பார்த்து நிகழ்ச்சியை பார்த்தால் புஸ்ஸாகிவிட்டது. இந்நிலையில் இன்று டேனி, மகத் பயங்கரமாக மோதிக் கொள்வது போன்று ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதுவும் மொக்கை போடாமல் இருக்குமா என்பது சந்தேகமே.

பார்வையாளர்கள்
ப்ரொமோவில் ஒன்றை காட்டி, நிகழ்ச்சியில் வேறொன்றை காட்டி பிக் பாஸ் மொக்கை போட்டாலும் இன்றாவது நன்றாக இருக்காதா என்ற எதிர்பார்ப்பில் நிகழ்ச்சியை பார்ப்பவர்களே அதிகம். நேற்று ஏமாந்த நிலையிலும் இன்றாவது சண்டை நிஜமாக இருக்கும் என்று நம்பும் பார்வையாளர்கள் இருக்கும் வரை பிக் பாஸ் திருந்தவே மாட்டார், அவரை அசைக்கவே முடியாது.

ஐஸ்வர்யா
டாஸ்க் ஒன்றின்போது ஐஸ்வர்யா சர்வாதிகாரி போன்று பேயாட்டம் ஆடியதை பார்க்க பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்கள் பலர். இதை நோட் செய்த பிக் பாஸ் இன்று மீண்டும் ஐஸ்வர்யாவை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார். அது என்னவோ, பிக் பாஸுக்கு ஐஸ்வர்யா தான் ரொம்ப பிடித்திருக்கு என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இன்று அவரை தூண்டிவிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











