என்னோட அப்பா வயது அவருக்கு.. எப்படி அட்ஜெஸ்ட் பண்றது..பகீர் கிளப்பும் யாஷிகா பேட்டி!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் அப்பா வயது இயக்குநர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பேட்டி ஒன்றில் பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
சினிமா நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் காலம் காலமாக இருந்து வருகிறது. அண்மையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விசித்ரா, தான் சினிமாவில் இருந்து விலகியதற்கு அந்த தெலுங்கு நடிகர் தான் காரணம் என்றார். மேலும், அந்த படத்தில் நான் நடித்த போது அவருக்கு என் பெயர்கூட தெரியாது. ஆனால், நீ என் ரூமுக்கு வா என்றார். அப்போது இந்த ஓட்டலில் மேனேஜராக இருந்தவர் தான் என்னை அறை மாற்ற உதவினார். அவரைத்தான் நான் திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியிருந்தார்

நடிகை விசித்ரா சினிமாவில் நடக்கும் பாலியல் சீண்டல் குறித்து வெளிப்படையாக பேசியது சோசியல் மீடியாவில் பெரும் அதிர்வாலைகளை ஏற்படுத்தியது. அந்த நடிகர் யார், விசித்ரா கொடுத்த புகாருக்கு நடிகர் சங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பெரிய பஞ்சாயத்தே நடந்து வரும் நிலையில், நடிகை யாஷிகா ஆனந்தும் இது போன்ற ஒரு புகாரை கூறியுள்ளார்.
அப்பா வயது இயக்குநர்: அதில், நான் ஒரு படத்திற்காக ஆடிஷன் சென்றேன், ஸ்கிரீன் டெஸ்ட் செய்துவிட்டு புகைப்படங்களை எடுத்தேன் அப்போது, அம்மாவை வெளியில் அனுப்பி விட்டு, அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஒகே என்றால் படத்தில் நடிக்க வாய்ப்பு தருகிறேன் என்றார். அவர் அப்படி பேசியது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்ததால், நான் முடியாது என்று சொல்லிவிட்டு வெளியில் வந்துவிட்டேன். அவருக்கு என் அப்பா வயது இருக்கும், எனக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக நான் அவரின் பெயரை வெளியிடவில்லை என்று கூறி பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்த பேட்டியை பார்த்த பலர் தைரியமான நீங்களே இந்த பிரச்சனையை மூடிமறைத்தது தவறு என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
யாஷிகா ஆனந்த்: மாடலிங்கில் ஆர்வம் கொண்ட யாஷிகா ஆனந்த், இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். இரட்டை அர்த்த வசனம், விவகாரமான கதை அம்சம் கொண்ட இந்த படத்தின் மூலம் ரசிகர்களுக்கு தெரிந்து முகமாக மாறினார். இதையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். அதன் பின் தோழிகளுடன் ஜாலியாக காரில் சென்றபோது வேகமாக காரை ஓட்டி விபத்தில் சிக்கி சில மாதங்கள் படுத்தபடுக்கையாக இருந்தார். அதில் இருந்து மீண்டு வந்துள்ள யாஷிகா சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார்.
கைவசம் உள்ள படம்: நடிகை யாஷிகா ஆனந்த், ரிச்சர்ட் ரிஷியுடன் சேர்ந்து சில நொடிகளில் படம் வெளியானது. அந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய யாஷிகா நான் தல அஜித் ரசிகை என்றால், இன்ஸ்டாகிராமில் இவரின் பாலோவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. தற்போது யாஷிகாவின் கைவசம், இவன் தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு படம் என கணிசமான படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











