பிரபல சீரியலில் என்ட்ரியாகும் பிக்பாஸ் கேப்ரியல்லா.. எந்த சீரியல்னு பாருங்க!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கேப்ரியல்லா தற்போது சீரியலில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சிறுவர்களுக்கான நடன நிகழ்ச்சியில் பங்கேற்றவர் கேப்ரியல்லா. ஸ்ருதி ஹாசன் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார் கேப்ரியல்லா. இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார்.

ரூ. 5லட்சம் பணத்துடன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரும்பாலும் நியூட்ரலாகவே இருந்தார் கேப்ரியல்லா. சக போட்டியாளரான ஆஜித்துடன் நல்ல நட்பையும் பாராட்டி வந்தார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து 5 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேறினார் கேபி.

அசத்தல் போட்டோஸ்
அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகை கேப்ரியல்லா அடிக்கடி போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகிறார். தன்னுடைய அசத்தலான போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்திலும் ஷேர் செய்து வருகிறார் கேபி.

இரண்டாம் பாகம்
இதனை பார்த்த நெட்டிசன்கள் கேபி ஹீரோயின் ஆக ஆசைப்படுகிறார் என கிண்டலடித்து வந்தனர். இந்நிலையில் கேப்ரியல்லா புதிதாக சீரியல் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி செம ஹிட்டான ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்.

கேபிக்கு யார் ஜோடி?
ஈரமான ரோஜாவே சீரியலின் முதல் பாகம் செம ஹிட்டானதை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் லீடிங் ரோலில் நடிக்கிறார் கேபி. இந்த சீரியலில் கேபிக்கு ஜோடி யார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. மேலும் சீரியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
Recommended Video

அர்ச்சனாவின் செல்லப்பிள்ளை
குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியில் பெண் நடுவர்களில் ஒருவராக கலந்து கொண்டு அசத்தினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனாவின் அன்பு கேங்கில் ஒருவராகவும் வலம் வந்தார். மேலும் அர்ச்சனாவின் செல்லப்பிள்ளையாகவும் இருந்தார் கேபி.


Click it and Unblock the Notifications











