கவலைப்படாதீங்க சிஷ்யா.. கன்ஃபெஷன் ரூமில் சாண்டிக்கு ஆறுதல் கூறிய பிக்பாஸ்.. குருநாதா வேற லெவல்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 89 : Sandy and losliya fight

சென்னை: பிக்பாஸ் வீட்டில் சோகத்தில் இருந்த சாண்டியை அழைத்து பேசி பிக்பாஸ் சமாதானப்படுத்தியது பார்வையாளர்களை வெகுவாக ரசிக்க வைத்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினும் லாஸ்லியாவும் ஒருவரையொருவர் காதலித்து வருகின்றனர். பெற்றோர் கண்டித்தப் பிறகும் கூட கவினுடனான காதலை கைவிட லாஸ்லியாவுக்கு மனம் வரவில்லை.

கவினும் லாஸ்லியாவும் மட்டும்தான் பிக்பாஸ் வீட்டில் இருப்பது போன்று நடந்து கொள்கின்றனர். இருவரும் மட்டும் தனியாக சாப்பிடுவது, தனியாக பேசுவது, ஒருவருக்கொருவர் ஊக்கப்படுத்துவது என வேற ஸோனில் உள்ளனர்.

டெர்ம்ஸ் சரியில்லை

டெர்ம்ஸ் சரியில்லை

இதனால் மற்றவர்கள் என்ன பேசினாலும் அவர்களுக்கு தவறாகவே தெரிகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே கவினுக்கும் சாண்டிக்கும் இடையே டெர்ம்ஸ் சரியில்லாமல் உள்ளது.

எண்ணெய் ஊற்றும் லாஸ்லியா

எண்ணெய் ஊற்றும் லாஸ்லியா

சாண்டி என்ன பேசினாலும் தவறாகவே எடுத்துகொள்கிறார் கவின். போதா குறைக்கு லாஸ்லியாவும் தன்பாட்டுக்கு எரியும் நெருப்பில் எண்ணெய்யை எடுத்து ஊற்றுகிறார். அதுபத்தாது என சாண்டியையும் நீயெல்லாம் கவினுக்கு ஃபிரன்டா என்ற ரீதியில் கேள்விக்கேட்க தொடங்கிவிட்டார்.

சோகத்தில் சாண்டி

சோகத்தில் சாண்டி

லாஸ்லியா, சாண்டியிடம் எல்லை மீறி பேசுவதை கண்டுகொள்ளாத கவின், சாண்டி தவறு செய்வதை போல் பேசி வருகிறார். இதனால் மனமுடைந்து போன சாண்டி, சோகத்தில் ஆழ்ந்திருந்தார்.

சிஷ்யா என்ற பிக்பாஸ்

சிஷ்யா என்ற பிக்பாஸ்

இதனைக்கண்ட பிக்பாஸ் சாண்டியை கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்து பேசுகிறார். அப்போது துக்கம் தொண்டையை அடைக்க பேசமுடியாமல் தடுமாறுகிறார் சாண்டி. இதனைத்தொடர்ந்து சாண்டியை சமாதானப்படுத்தும் பிக்பாஸ், இரண்டாவது முறையாக சாண்டியை சிஷ்யா என குறிப்பிட்டார்.

சாண்டிக்கு பிக்பாஸ் அட்வைஸ்

சாண்டிக்கு பிக்பாஸ் அட்வைஸ்

அதோடு இதுவரை நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை, எப்போதும் போலவே இப்போதும் இருங்கள் என்று கூறுகிறார். மேலும் கவின் உங்கள் பிரன்டுதானே அவரிடம் நீங்களே பேசுங்கள், இப்போது பேச முடியாவிட்டால் நேரம் பார்த்து பேசுங்கள் என அட்வைஸ் செய்கிறார் பிக்பாஸ்.

புல்லரிக்க செய்த பிக்பாஸ்

புல்லரிக்க செய்த பிக்பாஸ்

அதுமட்டுமின்றி சாண்டி உங்களுக்கு பவர்ஃபுல் பாட்டியின் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு என்றும் கூறி சாண்டியை மட்டுமின்றி பார்வையாளர்களையும் புல்லரிக்க செய்துவிட்டார் பிக்பாஸ். கடந்த மூன்று நாட்களான சாண்டி, ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பவர்ஃபுல் பாட்டியின் கதையை சொல்லி கலகலப்பூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிக்க வைத்த பிக்பாஸ்

ரசிக்க வைத்த பிக்பாஸ்

ஏற்கனவே சாண்டியிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ளும் பிக்பாஸ், அவ்வப்போது அவரை செல்லமாக சீண்டி வருவார். இந்நிலையில் நேற்று சோகமாக இருந்த சாண்டியை ஃபார்முக்கு கொண்டு பிக்பாஸ் மெனக்கெட்டது பார்வையாளர்களை ரொம்பவே ரசிக்க வைத்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X