பிக்பாஸ் சொன்ன அந்த ஒத்த வார்த்தை.. செம குஷியில் சாண்டி ஆர்மி!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் சாண்டியை கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்த பிக்பாஸ் கூறிய ஒரு வார்த்தை அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் மூன்று பேர் நாமினேஷனில் உள்ளனர். லாஸ்லியா, அபிராமி, சாக்ஷி ஆகியோர் ஆவர்.
இந்த வாரம் சாக்ஷி வெளியேற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதன்படி சாக்ஷிதான் பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

மூன்று பேருக்கும் பாடல்
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் சாண்டியை கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்தார் பிக்பாஸ். அப்போது நாமினேஷன் லிஸ்ட்டில் உள்ள மூன்று பேருக்கும் கவினுடன் சேர்ந்து பாடல் தயாரிக்கும் படி சாண்டியிடம் கூறினார் பிக்பாஸ்.
ஆர்வமாக கேட்ட சாண்டி
மேலும் இந்த விஷயம் யாருக்கு தெரிய வேண்டாம் என்றும் கூறினார் பிக்பாஸ். அதற்கு சரி என்ற சாண்டி, குருநாதா இந்த மூன்று பேரில் நாளை கண்டிப்பாக ஒருவர் வெளியே போய்விடுவாரா என மிகவும் ஆர்வமாக கேட்டார்.
நீங்கள் போகலாம் சிஷ்யா
அதற்கு சற்று பொறுமையுடன் அமைதி காத்த பிக்பாஸ், பின்னர் நீங்கள் போகலாம் சிஷ்யா என்றார். இதனைக் கேட்ட சாண்டி ஐ லவ் யூ குருநாதா என முத்தம் கொடுத்தார் சாண்டி.

யாரையும் சொன்னதில்லை
இதுவரை பிக்பாஸ் யாரையும் சிஷ்யா என்றெல்லாம் சொன்னதில்லை. யாரையும் அவர்களின் பெயரை தவிர வேறு மாதிரி அழைத்ததும் இல்லை. ஆனால் சாண்டியை மட்டும் உரிமையோடு சிஷ்யா என்றார்.

செம குஷி
இதனால் சாண்டி ஆர்மியினர், சாண்டி மீது பிக்பாஸ்க்கு சாஃப்ட் கார்னர் உள்ளது என செம குஷியில் உள்ளனர். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் சிறந்த என்டர்டெயினராக சாண்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











