ம்... சாண்டிக்கு வேட்டைதான்... பிக்பாஸ் இன்னைக்கு என்ன டாஸ்க் கொடுத்திருக்காரு பாருங்க!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று சாண்டிக்கு பிடித்த டாஸ்க்கே கொடுக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னதான் சண்டை சச்சரவுகள் இருந்தாலும் அவ்வப்போது அதன் நடுவே சில டாஸ்க்குகளும் கொடுக்கப்படுகின்றன. போட்டியாளர்களுக்கு நாள்தோறும் ஒவ்வொரு டாஸ்க்கும் அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் ஸ்பான்சர்களால் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று பிக்பாஸ் வீட்டில் சாப்பாட்டு போட்டி நடத்தப்படுகிறது. இதில் சாண்டியும் தர்ஷனும் பங்கேற்கின்றனர்.

நட்ஸ், குலாப் ஜாமுன்
ஏற்கனவே சமையல் போட்டி நடத்தப்பட்ட போது கொடுக்கப்பட்ட நட்ஸ்களை சாண்டியும் கவினும் ஆட்டையை போட்டு சாப்பிட்டனர். அதனை தொடர்ந்து போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட குலாப் ஜாமுனையும் யாருக்கும் தெரியாமல் லவுட்டி பெட்ரூமில் வைத்து சாப்பிட்டனர் சாண்டியும் கவினும்.

சாப்பிடும் போட்டி
இதேபோல் பிக்பாஸ் வீடே சாக்லேட் சண்டையில் ரணகளப்பட்டபோது, நாம் ஷேர் செய்துகொள்ளலாம் சாக்லேட்டை எடு என்றார் சாண்டி. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களுக்கு சாப்பிடும் போட்டியை நடத்தியுள்ளார் பிக்பாஸ்.

லட்டு சாப்பிடும் போட்டி
அதற்காக அவர்களுக்கு லட்டு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் அதிக லட்டுகளை சாப்பிடுபவர்கள் வெற்றியாளர்கள் என அறிவிக்கப்படுவார்கள் என தெரிகிறது. இந்த போட்டியின் நடுவராக சேரன் உள்ளார்.

25 லட்டுகள் மீதம்
போட்டியின் படி தர்ஷனும் சாண்டியும் தலா 25 லட்டுகளை மீதம் வைத்து போட்டியை நிறைவு செய்துள்ளனர். எத்தனை லட்டுகள் கொடுக்கப்பட்டது, எத்தனை லட்டுகளை சாப்பிட்டனர் என்பது தெரியவில்லை.

சாண்டி ஹேப்பி
ஆனால் இனிப்பை விரும்பி சாப்பிடும் சாண்டி, நிச்சயம் இந்த போட்டியில் மகிழ்ச்சியுடன் பங்கேற்றிருப்பார் என தெரிகிறது. போட்டியில் யார் வெற்றிப்பெற்றார்கள் என்பது இன்று இரவு தெரியவரும்.
ஃபிஸிக்கல் டாஸ்க் கொடுங்க
இதனிடையே இதெல்லாம் ஒரு போட்டியா பிக்பாஸ், நாங்கலெல்லாம் இதை ஸ்கூல்லயே பார்த்துட்டோம் என விளாசியுள்ளனர் நெட்டிசன்கள். டஃப்பான ஃபிஸிக்கல் டாஸ்க் கொடுங்கள் என்று அவர்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











