’இதுக்காக 5 வருஷம் காத்திருக்கேன்’ சீக்கிரமா சொல்லி தொலை.. கணவரிடம் வேண்டுகோள் வைத்த அனிதா சம்பத்!

சென்னை: பிக்பாஸ் பிரபலமான அனிதா சம்பத் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள பதிவு வைரலாகி வருகிறது.

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்தவர் அனிதா சம்பத். 2.o, காலா, காப்பான் உள்ளிட்ட சில படங்களில் சிறுசிறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை அனிதா சம்பத், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

ஆரம்பத்திலேயே சுரேஷுடன் வாக்குவாதம்

ஆரம்பத்திலேயே சுரேஷுடன் வாக்குவாதம்

இதில் டாஸ்க்குகளையும் ரூல்ஸ்களையும் சரியாக பின்பற்றிய அனிதா சம்பத், அடிக்கடி கோபப்பட்டதால் தனது பெயரைக் கெடுத்துக்கொண்டார். ஆரம்பத்திலேயே சுரேஷ் சக்கரவர்த்தியுடன் அனிதா சம்பத்துக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு ஜித்தன் ரமேஷ், ரியோ, கேபி, சனம், நிஷா, ஆரி என அனைவரிடமும் முகத்தைக் காட்டினார்.

ஆரியிடம் ருத்ர தாண்டவம் ஆடிய அனிதா

ஆரியிடம் ருத்ர தாண்டவம் ஆடிய அனிதா

கடைசியாக ஆரியிடம் தனது உச்சக்கட்ட கோபத்தை காட்டி ருத்ரதாண்டவம் ஆடினார். நாக்கை துருத்தியும் கைகளை நீட்டியும் அவர் பேசிய பேச்சு பெரும் வைரலானது. அவருடைய சுயரூபம் இதுதான் என்று சமூக வலைதளங்களில் விளாசி தள்ளிய ரசிகர்கள் அவரை சொல்லி வைத்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றினர்.

தந்தையின் மரணம் பேரிடி

தந்தையின் மரணம் பேரிடி

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே சென்ற அனிதா சம்பத்துக்கு அவரது தந்தையின் மரணம் பேரிடியாக இருந்தது. ஷீரடிக்கு மகனுடன் ட்ரெயினில் சென்ற அனிதாவின் தந்தை சம்பத், மீண்டும் சென்னைக்கு வரும் போது ரயிலில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். பிக்பாஸிலிருந்து வெளியேறிய அனிதா சம்பத் அவரது தந்தையை உயிருடன் ஒரு முறை கூட பார்க்கவில்லை.

தவறை உணர்ந்த அனிதா சம்பத்

தவறை உணர்ந்த அனிதா சம்பத்

அனிதா சம்பத்தின் இந்த துயரம் ரசிகர்களையும் ஆட் கொண்டது. பலரும் அவருக்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற அனிதா சம்பத் தனது தவறை உணர்ந்தார். சனம் ஷெட்டி மற்றும் ஆரியுடன் நட்பை பாராட்ட தொடங்கினார் அனிதா சம்பத்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள அனிதா

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள அனிதா

பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் அனிதா. இதில் ஷாரிப்புடன் ஜோடியாக நடனமாடி வருகிறார். சமூக வலை தளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள அனிதா சம்பத், தனது குடும்ப நிகழ்ச்சிகளையும் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். மேலும் தன்னுடைய நிகழ்ச்சிகள் குறித்த பதிவுகளையும் அனிதா சம்பத் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.

2019ல் இல் பிரபாவுடன் திருமணம்..

2019ல் இல் பிரபாவுடன் திருமணம்..

மேலும் தனது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார். அனிதா சம்பத் கடந்த 2019ஆம் ஆண்டு பிரபாகரன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். கிடைக்கும் இடத்தில் எல்லாம் தனது காதல் கணவரின் பெருமையை பேசி வரும் அனிதா சம்பத், அவர் மீதான தனது காதலையும் வெளிப்படுத்தி வருகிறார்.

அனிதா சம்பத் இரண்டாவது திருமண நாள்

அனிதா சம்பத் இரண்டாவது திருமண நாள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போதும் சரி, கமலுடனான பிக்பாஸ் மேடையிலும் சரி அனிதா சம்பத் தனது கணவர் குறித்தும் அவருடைய காதல் குறித்தும் உருக்கமாக பேசினார். இந்நிலையில் அனிதா சம்பத் நேற்று முன்தினம் தனது இரண்டாவது திருமண நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.

சிறந்த கணவர்.. சிறந்த மருமகன்..

சிறந்த கணவர்.. சிறந்த மருமகன்..

தனது கணவருடன் சேர்ந்து எடுத்த போட்டோவை பகிர்ந்துள்ள அனிதா சம்பத், அந்த போட்டோவுக்கு கேப்ஷனாக சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவர் குறிப்பிட்டிருப்பதாவது, சிறந்த கணவர்.. சிறந்த மருமகன்.. (இரண்டாவது மகன்) எங்கள் குடும்பத்திற்கு.. என் நாத்தனார்களுக்கு சிறந்த சகோதரர்.. என் மாமியாருக்கு சிறந்த மகன்.. ஒவ்வொரு நாளும் மிஸ்டர் பர்ஃபெக்ட்..

ஒரே பெரிய நல்ல விஷயம்

ஒரே பெரிய நல்ல விஷயம்

கடவுள் எனக்கு வாழ்க்கையில பண்ண ஒரே பெரிய நல்ல விஷயம் உன்ன மீட் பண்ண வச்சதுதான்.. மீடியா பெண்களோட வளர்ச்சியை திருமணம் தடுத்து விடும் என்று மக்கள் சொல்வார்கள்.. ஆனால் நம் கல்யாணத்துக்கு பிறகுதான் நான் வளர்ச்சியடைந்திருக்கிறேன்.. இது எல்லாம் உன்னுடைய நம்பிக்கை.. நீ கொடுத்த சுதந்திரம்.. மற்றும் நீ கொடுத்த ஊக்கம்தான் காரணம்..

திருப்பி கொடுக்க காதல் மட்டும்தான் இருக்கு

திருப்பி கொடுக்க காதல் மட்டும்தான் இருக்கு

எல்லா ஏற்ற தாழ்வுகளையும் தாண்டி நீங்கள் என்னிடம் காட்டும் அன்கண்டிஷ்னல் காதலுக்கு நன்றி.. நீங்கள் எனக்கு செய்யும் எல்லாவற்றுக்கும் நன்றி.. சேர்ந்தே நமது கனவுகளை அடைவோம் பப்பு.. என் வளர்ச்சியோட முழு காரணமாவும் இருந்துட்டு ஓரமா நின்னு கை தட்டி, ரசிக்கிற உனக்கு திருப்பி கொடுக்க காதல் தவிரை எதுவும் இல்ல.. நம் காதல் போல் நாமும் வளர்வோம்!

5 வருஷமா வெய்ட் பண்றேன்..

5 வருஷமா வெய்ட் பண்றேன்..

மகிழ்ச்சியான இரண்டாம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துகள் பப்பு.. மற்றும் 61வது மாத காதல் அன்னிவர்சரியும் கூட.. சீக்கிரமா ஐ லவ் யூ சொல்லி தொலை.. 5 வருஷமா வெய்ட் பண்றேன்.. இவ்வாறு தனது காதல் கணவருக்கு திருமண நாள் வாழ்த்து கூறி அன்பை வெளிப்படுத்தியுள்ளார். அனிதா சம்பத்தின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கணவர் ஒரு குழந்தை நட்சத்திரம்

கணவர் ஒரு குழந்தை நட்சத்திரம்

அனிதா சம்பத்தின் கணவரான பிரபாகரன் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார். அவருடைய சினிமா கனவு பலிக்காமல் போய்விட்டதாக ஏற்கனவே தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார் அனிதா சம்பத். அனிதா சம்பத் தற்போது மனோ கார்த்திகேயன் இயக்கத்தில் ஜாங்கோ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வரவுள்ளது. இதேபோல் எமர்ஜென்ஸி என்ற படத்திலும் நடித்துள்ளார் அனிதா சம்பத் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X