அய்யா சாமி இந்த டாஸ்க்க சீக்கிரம் முடிங்க... காலில் விழாத குறையாக கெஞ்சும் ரசிகர்கள்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்டுள்ள அழுகாச்சி டாஸ்கை விரைந்து முடிக்குமாறு ரசிகர்கள் கெஞ்சாத குறையாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பிரபலங்கள் தங்களை பாதித்த மற்றும் மறக்கமுடியாத வாழ்க்கை சம்பவங்களை பகிர்ந்துகொள்ளுமாறு கடந்த 4 நாட்களுக்கு முன்பு டாஸ்க் கொடுத்தார் பிக்பாஸ். இதைத்தொடர்ந்து ஹவுஸ் மேட்ஸ் தங்கள் வாழ்க்கையில் சந்தித்த மறக்க முடியாத சம்பவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
இதனால் 4 நாட்களாக அழுகையுடனே நகர்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. நேற்று கவின் மற்றும் வனிதா தனது வாழ்க்கையில் சந்தித்த மறக்கமுடியாத சம்பவங்களை பகிர்ந்து கொண்டனர்.

பேசவில்லை
இதுவரை மோகன் வைத்யா, ரேஷ்மா, சரவணன், சேரன், மதுமிதா, அபிராமி, ஷெரின், தர்ஷன், கவின், வனிதா அகியோர் தங்களின் மறக்க முடியாத சம்பவங்களை பகிர்ந்து கொண்டனர். லாஸ்லியா, முகென், ஃபாத்திமாபாபு, சாக்ஷி, மீரா மிதுன், சாண்டி ஆகியோர் இன்னும் பேசவில்லை.

அழுகாச்சி எபிசோடு
இதனால் இன்று அல்லது வரும் எபிசோடுகளில் அவர்கள் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக அழுகாச்சி எபிசோடு மேலும் தொடரும் என்று ரசிகர்கள் கவலை கொண்டுள்ளனர்.

ரசிகர்கள் கோரிக்கை
ஆகையால் இந்த அழுகாச்சி டாஸ்க்கை விரைவாக முடிக்குமாறு பிக்பாஸ்க்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள் இந்த கோரிக்கையை வெவ்வேறு வகையில் வைத்து வருகின்றனர்.
சகிக்க முடியல
இந்த வாரம் பூரா எழவு கூட்டிட்டு இருக்காங்க...
அதுவும் இந்த வனிதா பேசுறது சகிக்க முடியல... என்கிறார் இந்த நெட்டிசன்.
பார்க்க அழகாக உள்ளது
தர்ஷன் ரொம்ப ஆசையா வனிதா விஜயகுமார் கதைய கேட்டிட்டு இருக்கான்.. சின்னப்பிள்ளைங்க மாதிரி..
பார்க்க அழகாக உள்ளது.. என்கிறார் இந்த நெட்டிசன்..
சூம் போறீங்க
வனிதாக்கு மட்டும் ஏன்யா அப்படி ஒரு சூம் போறீங்க.. ப்பா.. என்கிறார் இந்த நெட்டிசன்.
முடிச்சு தொலைங்க
டேய் இன்னும் இந்த டாஸ்க் முடிக்கலயா.. சீக்கிரம் முடிச்சு தொலைங்க.. என டென்ஷன் ஆகிறார் இவர்.


Click it and Unblock the Notifications











