ஏன் இவ்ளோ கஷ்டமான டாஸ்க் கொடுத்திருக்கீங்க.. எண்டேமால் பணம் கொடுக்கலையா? வேற லெவல்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 4 : Day 96 : புது புது டாஸ்க்குடன் கலக்கும் Bigg Boss-வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க்கை வலைதளவாசிகள் மிகக் கொடூரமாக கிண்டலடித்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் ஃபைனல்ஸை சந்திக்க உள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பெரும்பாலான போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர்.

இதனால் என்ன டாஸ்க் கொடுக்கப்பது எப்படி எஞ்சிய நாட்களை ஓட்டுவது என தெரியாமல் திணறி வருகிறார் பிக்பாஸ். இதன் காரணமாக கடந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களை வரவழைத்தும் அவர்களின் படங்களை விளம்பரப்படுத்தியும் நிகழ்ச்சியை நகர்த்தி வருகிறார் பிக்பாஸ்.

பிக்பாஸ் டாஸ்க்

பிக்பாஸ் டாஸ்க்

கடந்த இரண்டு நாட்களாக கவின் வெளியேறியதை வைத்து ஓட்டி வந்த பிக்பாஸ் இன்றும் அதே புராணத்தை ஆரம்பித்தார். ஆனால் நெட்டிசன்கள் வெறுப்பேற்றவே புரமோவை மாற்றிய பிக்பாஸ் டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார்.

தெர்மாகோல் டாஸ்க்

தெர்மாகோல் டாஸ்க்

இதனை வழக்கத்திற்கு மாறாக 4 புரமோக்களை வெளியிட்டு தெரியப்படுத்தியிருக்கிறார் பிக்பாஸ். அந்த நான்காவது புரமோவில் இடம் பெற்றிருப்பதாவது, கார்டன் ஏரியாவில் ஒரு கண்ணாடி பெட்டியில் தெர்மாகோல் நிரப்பப்பட்டுள்ளது.

யார் வெற்றி?

யார் வெற்றி?

அந்த தெர்மாகோலை பாக்ஸிங் க்ளவுஸ் அணிந்து கொண்டு அங்குள்ள பவுலில் நிரப்ப வேண்டும். இதில் யார் முதலில் அதிகமாக நிரப்புகிறாரோ அவரே வெற்றியாளர் ஆவார். இப்படி ஒரு டாஸ்க் கொடுத்துள்ளார்.

எல்கேஜி பசங்க டாஸ்க்

இதனை பார்த்த நெட்டிசன்கள் மிகவும் கடினமான டாஸ்க் கொடுத்துட்டிங்க பிக்பாஸ் என கிண்டலடித்துள்ளனர். எல்கேஜி பசங்க செய்யுற டாஸ்க். இதைக்கூட ஏன் கொடுக்றீங்க? என்று கேட்டு டிவிட்டி வருகின்றனர்.

என்டேமால் பணம் இல்லையா?

சிலர் ஏன் இவ்ளோ கஷ்டமான டாஸ்க் கொடுக்குறீங்க என கேட்டு வெறுப்பேற்றியுள்ளனர். மேலும் என்டேமால் நிறுவனம் பணம் கொடுக்கவில்லையா என கேட்டு மரண கலாய் கலாய்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X