காலையிலேயே முதுகில் மூட்டையைக்கட்டி ஓடவிடும் பிக்பாஸ்.. விழுந்து வாரும் ஹவுஸ்மேட்ஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட பிஸிக்கல் டாஸ்க்கில் ஹவுஸ்மேட்ஸ்கள் விழுந்து வாரியுள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் நாளுக்கு நாள் போட்டிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
டிக்கெட் டு பினாலே டாஸ்க்குகளை ஹவுஸ்மேட்ஸ்கள் வெறித்தனமாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.

தர்மகோல் பை
அதன்படி போட்டியாளர்களின் முதுகில் தர்மகோல் நிரப்பப்பட்ட பை மாட்டப்பட்டுள்ளது. ஒரு வட்டத்துக்குள் போட்டியாளர்கள் ஓடும் போது அவர்கள் மாட்டியிருக்கும் பைகளை கிழித்து பையை காலியாக்க வேண்டும்.

யாருடைய பை கிழியாமல்
யாருடைய பை கிழிக்கப்படாமால் இருக்கிறதோ அவர்களே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். இந்நிலையில் இந்த போட்டி கார்டன் ஏரியாவில் நடைபெறுகிறது.

விழுந்து வாரும் ஹவுஸ்மேட்ஸ்
இதில் ஒருவருக்கொரு விரட்டி விரட்டி விளையாடுகின்றனர். இதனால் ஹவுஸ்மேட்ஸ்கள் விழுந்து வாருகின்றனர். இதில் ஷெரின் மற்றும லாஸ்லியா ஆகியோர் கீழே விழுந்து காலில் அடிபடுகிறது. இப்படியாக முடிகிறது முதல் புரமோ.

வரவேற்பு
இந்நிலையில் இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள் இப்போவாது பிஸிக்கல் டாஸ்க் கொடுக்குறீங்களே பிக்பாஸ் ரொம் நன்றி என பதிவிட்டுள்ளனர். எப்போதும் தற்பெருமை, மற்றவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது போன்ற டாஸ்க்கால் கடுப்பாகியிருந்த பார்வையாளர்கள், இது போன்ற டாஸ்க்குகளை வரவேற்க தொடங்கியுள்ளனர்.
ஆட்டம் ஆரம்பம்
ஆட்டம் ஆரம்பம்.. இந்த மாதிரி உருப்படியா டாஸ்க் குடுக்குறதை விட்டுட்டு எப்ப பார்த்தாலும் பேச்சு போட்டி பட்டிமன்றம்னு வச்சிட்டு இருக்குறது. இப்பாவது புத்தி வந்ததேடா உங்களுக்கு.இந்த 100 நாள் ஓட கஷ்டத்தை 20 நாள்ல என்னனு காட்டணும் அது தான் பைனல் என்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











