பிக்பாஸுக்கு கவின் மேல காண்டா? இல்ல சாக்ஷி மேல காண்டா? வச்சு செய்றாரே!
சென்னை: கவினுக்கு பிக்பாஸ் கொடுத்துள்ள டாஸ்க் யாரு மீதுள்ள காண்டு என பார்வையாளர்கள் கேட்கத் தொடங்கிவிட்டனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சாக்ஷி அகர்வாலை பார்வையாளர்கள் விஷ பாட்டில் என்றே அழைத்து வருகின்றனர். அந்த அளவுக்கு சைலன்ட்டாக சண்டை மூட்டி விட்டு வருகிறார் சாக்ஷி அகர்வால்.
கடந்த இரண்டு நாட்களாக நடிகர் கமல்ஹாசன் சாக்ஷியை கட்டம் கட்டி செய்தார். பிறந்த நாள் என்றும் பாராமல் குறும்படம் போட்டு அவரது முகத்திரையை கிழித்தார் கமல்ஹாசன்.

மூக்கை உடைத்த கமல்
நேற்றும் ஹவுஸ்மேட்ஸ்கள் பின்னால் பேசிய டயலாக்குகளை பேசிக்காட்டி மூக்கை உடைத்தார். அப்போது மதுமிதா, ஷெரின், சாண்டி ஆகியோர் தாங்கள் பேசியதை ஒப்புக்கொண்டனர்.

கமுக்கமாக உட்காந்திருந்த சாக்ஷி
ஆனால் சாக்ஷி மட்டும் ரேஷ்மா குறித்து பேசியதையும், கவின் குறித்து பேசியதையும் மீரா குறித்து பேசியதையும் ஒப்புக்கொள்ள வில்லை. மாறாக ஒன்றுமே தெரியாததுபோல் கமுக்கமாக உட்காந்திருந்தார் சாக்ஷி.

பாட்டுப்பாடவா பார்த்து பேசவா
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள புரமோவில் ஹவுஸ்மேட்ஸ்க்கு பிக்பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்துள்ளார். அதாவது பாட்டுப்பாடவா பார்த்து பேசவா என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது அந்த டாஸ்க்.

பொய் காதல் நாடகம் ஏனடி?
இதில் கவின் பங்கேற்கும் போது நீயா பேசியது, என் அன்பே நீயா பேசியது என்ற பாடல் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பாடும் கவின் கண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி.. அன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி.. என்று பாடுகிறார்.

பாடல் பாடிய கவின்
முழுக்க முழுக்க அந்த பாடலை சாக்ஷியை மட்டுமே பார்த்து பாடுகிறார் கவின். அப்போது சிரித்தபடியே எழுந்து நிற்கும் சாக்ஷி, ஒரு கட்டத்தில் தலையணையை எடுத்து கவின் மீது எறிகிறார். இப்படியாக உள்ளது அந்த டாஸ்க்.

கரெக்ட்டான பாடல் தான்
இதனை பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ்க்கு கவின் மீது காண்டா இல்லை சாக்ஷி மீதா? இப்படி வச்சு செய்கிறீர்களே என்று கேட்க தொடங்கியுள்ளனர். ஆனால் இந்த பாடல் இந்த ஸ்ட்சுவேஷனில் இருவருக்கும் தேவைதான். கரெக்டா பல்ஸ பிடிச்சு வேலை பார்க்குறாருய்யா இந்த பிக்பாஸ்!


Click it and Unblock the Notifications











