பிக்பாஸ் கிராண்ட் பினாலேவில் கமல் அணிந்தது என்ன? துண்டா அல்லது துப்பட்டாவா?
சென்னை: பிக்பாஸ் 2 கிராண்ட் பினாலேவில் கமல்ஹாசன் அணிந்திருந்த வேஷ்ட்டி சட்டை வித்தியாசமாக இருந்தது.
மூன்று மாதங்களாக இழுத்தடித்த பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே தொடங்கியது.
கோலாகலமாக ஆடல் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கிய பிறகு, விருமாண்டி பாட்டு போட்டு கமல்ஹாசனுக்கு மாஸ் எண்ட்ரி கொடுத்தார்கள்.

வேஷ்டி சட்டையில் வந்த கமல்ஹாசன், ஐந்து மீட்டர் நீளம் உள்ள ஒரு துண்டை டபுள் சைடு மாராப்பு போடுவதுபோல் போட்டிருந்தார். அது துண்டா அல்லது பள்ளிக்குச் செல்லும் சிறுமிகள் சீறுடையோடு அணியும் துப்பட்டாவா என சந்தேகம் வந்தது.
கிராண்ட் பினாலே என்பதற்கு... நிறைவு விழா என புதிய அர்த்தம் கூறினார். மேலும் நான் சாட்சியாகத்தான் இருக்க முடியுமே தவிற யாருக்கும் சப்போர்ட் செய்ய முடியாது. எனக்கு எல்லோருமே என்னுடைய குடும்பத்தினர்தான் என்றார்.
கேள்விபதில் நேரம் இது, கேட்கலாம் என்றதும் பலரும் ஆர்வமாக கேள்வி கேட்க முற்பட்டனர். ஆனால் மூன்று நான்கு கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்துவிட்டு கேள்விபதில் நிறைவுபெற்றது எனக் கூறிவிட்டார்.
அடுத்த சீசன் தொகுத்து வழங்குவீங்களா எனக் கேட்கப்பட்டதற்கு, பண்ணனுமா வேணாமா? என்றார். என்னடா இது கோலை நம்ம பக்கமே போட்டுட்டாரே என கேள்வி கேட்டப் பெண் வேறு வழியில்லாமல் பண்ணனும் எனச் சொல்ல.. " பண்ணிட்டா போச்சு..." என பதிலளித்தார்.
அதனால் அடுத்த சீசனும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குவார் என்பது தெரிந்துவிட்டது.


Click it and Unblock the Notifications











