பாவம்யா.. சேரனுக்கு டைம்மே சரியில்ல போல.. பிக்பாஸ் வீட்டுல எல்லார்கிட்டயும் வாங்கி கட்டிக்கிறாரு!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள இயக்குநர் சேரனை ஹவுஸ்மேட்ஸ்கள் தொடர்ந்து இன்சல்ட் செய்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில்
நடிகரும் இயக்குநருமான சேரன் பங்கேற்றுள்ளார். மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

அவர்களில் ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா ஆகியோர் வெளியேற்றப்பட்டுவிட்டனர். தற்போது 13 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.

அவமானப்படுத்தும் மீரா

அவமானப்படுத்தும் மீரா

பிக்பாஸ் வீட்டில் உள்ள மீராவுக்கும் சேரனுக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஆகவில்லை. மீரா சேரனை கிடைக்கும் கேப்பில் எல்லாம் அவமனாப்படுத்தி வருகிறார்.

கூட்டு சேர்ந்து டார்கெட்

கூட்டு சேர்ந்து டார்கெட்

சேரன் குறித்து தரக்குறைவாக பின்னாடி பேசிவருகிறார் மீரா மிதுன். சேரனுக்கு பிடிக்காதவர்களுடன் கூட்டு சேர்ந்துகொண்டு அவரை டார்கெட் செய்து வருகிறார்.

கத்தாதீங்க டீசன்ட்டா பேசுங்க

கத்தாதீங்க டீசன்ட்டா பேசுங்க

இந்நிலையில் பிக்பாஸ் கொடுத்துள்ள டாஸ்க்கின் படி ஊர்தலைவரான சேரன் சக கிராம மக்களுடன் கோபப்பட வேண்டும் கத்தி பேச வேண்டும். அதன்படி பேசிய அவரை நேற்று முன்தினம் கத்தி பேசாதீங்க டீசன்ட்டா பேசுங்க என்று கூறி இன்சல்ட் செய்தார் மீரா.

நீ தான்டா ஃபூல்

நீ தான்டா ஃபூல்

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் தனது டாஸ்க்கின் படி கத்திய சேரனை புரிந்துகொள்ளாத ரேஷ்மா அவரை கண்டபடி திட்டிவிட்டார். இதனால் பார்க்கவே பரிதாபமாக காணப்பட்டார் சேரன். நீ தான்டா ஃபூல் போன்ற வார்த்தைகளையும் அவர் மீது பயன்படுத்தினார் ரேஷ்மா.

சேரனை கத்திய சாக்ஷி

சேரனை கத்திய சாக்ஷி

அவரை தொடர்ந்து சாக்ஷியும் சேரனை கட்டங்கட்டி செய்தார். மதுமிதாவை குசுகுசுவென சமாதானம் செய்தார் சாக்ஷி. அப்போது சேரனும் மதுமிதாவை சமாதானம் செய்ததால் கடுப்பான சாக்ஷி சேரனை குறி வைத்து கத்தினார்.

தொடர்ந்து அவமதிப்பு

தொடர்ந்து அவமதிப்பு

இதனால் சேரனின் முகம் முற்றிலும் மாறிவிட்டது. தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் இயக்குநர் சேரனை அவமதித்து வருகின்றனர். இதுவரை சேரன் யார் குறித்தும் புரணி பேசியதில்லை.

வார்த்தை தாக்குதல்

வார்த்தை தாக்குதல்

பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சண்டைகளை கூட தீர்த்து வைக்கும் முயற்சியில்தான் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் ஒரு சிலரை தவிர்த்து மொத்த குடும்பமும் அவரை கடுமையான வார்த்தைகளால் தாக்கி வருகின்றனர்.

நல்ல படைப்பாளி

நல்ல படைப்பாளி

ஹவுஸ்மேட்ஸ்களின் தாக்குதல்களால் மன உளைச்சலில் காணப்படுகிறார் சேரன். நான்கு தேசிய விருதுகளை பெற்றுத் தந்தவர், நல்ல படைப்புகளை தந்தவர் என்ற அடிப்படையிலாவது சேரனுக்கு சக ஹவுஸ்மேட்ஸ்கள் மரியாதை கொடுக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X