For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கையை ஆட்டாம பேசுங்க.. லாஸ்லியாவை அசிங்கப்படுத்திய பிக்பாஸ்!

    |
    Bigg Boss 3 Tamil : Promo 2 : Day 92 : லொஸ்லியா கொஞ்சோ Serious இருக்கட்டும் -வீடியோ

    சென்னை: நேற்றைய எபிசோடில் நாமினேஷன் புராசஸின் போது கையை ஆட்டி ஆட்டி பேசிய லாஸ்லியாவை தரமாக மொக்கை செய்தார் பிக்பாஸ்.

    கடந்த சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த முறை ஹவுஸ்மேட்ஸ்களிடம் விளையாடி வருகிறார் பிக்பாஸ். குறிப்பாக சாண்டியை சிஷ்யா என்றது, முகெனை ஐயா என்றது, ஷெரினை அழகாய் இருக்கீங்க என்று கூறியதெல்லாம் ரசிக்கும் படியாகவே இருந்து வருகிறது.

    இதேபோல் லாஸ்லியாவையும் அவ்வப்போது மைக்கை சரியா மாட்டுங்க என்று கூறி மொக்கை கொடுப்பது என வேற லெவலில் உள்ளார் பிக்பாஸ். டைமிங்கில் பிக்பாஸ் கொடுக்கும் கமென்டுகளும் காமெடிகளும் ஹவுஸ்மேட்ஸ்கள் மட்டுமின்றி பார்வையாளர்களையும் ரசிக்க வைக்கிறது.

    முதல் ஆளாக

    முதல் ஆளாக

    இந்நிலையில் நேற்றைய எபிசோடில் நாமினேஷன் புராசஸ்க்காக ஹவுஸ்மேட்ஸ்களை ஒவ்வொருவராக கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்தார் பிக்பாஸ். முதல் ஆளாக கன்ஃபெஷன் ரூமுக்குள் சென்றார் லாஸ்லியா.

    லாஸ்லியாவின் பதில்

    லாஸ்லியாவின் பதில்

    அப்போது, யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள், என்ன காரணம் என்று சொல்லுங்கள் என்று கேட்டார் பிக்பாஸ். அதற்கு பதில் சொல்ல ஆரம்பித்த லாஸ்லியா, கவினைதான் காப்பாற்ற விரும்புகிறேன் என்றார்.

    கைகளை ஆட்டியபடி

    கைகளை ஆட்டியபடி

    தொடர்ந்து, கவின் ஆரம்பத்தில் இருந்து நிறைய அப்ஸ் அன்ட் டவுன்ஸ்களை பார்த்திருக்கிறார். நிறைய பிரச்சனைகளை சந்தித்திருக்கிறார் என கைகளை ஆட்டியபடி பேசிக்கொண்டிருந்தார். அவர் கைகளை ஆட்டியதை பார்க்க பார்வையாளர்களுக்கே கடுப்பானது.

    கையை ஆட்டாம பேசுங்க?

    கையை ஆட்டாம பேசுங்க?

    பிக்பாஸ் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, லாஸ்லியா கைகளை ஆட்டாமல் பேசுங்கள், நீங்கள் கைகளை ஆட்டி ஆட்டி பேசுவதால் நீங்கள் பேசுவதை கேமராவால் பதிவு செய்ய முடியவில்லை என்று கூறி பல்ப் கொடுத்தார்.

    மீண்டும் பல்ப்

    மீண்டும் பல்ப்

    இதனை தொடர்ந்து கைகளை கால்களுக்கு நடுவில் வைத்தப்படி பேசினார் லாஸ்லியா. அவர் காரணத்தை சொல்வதற்குள்ளேயே போதும் லாஸ்லியா நீங்கள் சொன்ன காரணம் பதிவாகிவிட்டது என்று கூறி மீண்டும் பல்ப் கொடுத்தார் பிக்பாஸ்.

    சிரிக்காதீங்க சீரியஸா இருங்க

    சிரிக்காதீங்க சீரியஸா இருங்க

    மேலும் நாமினேஷன் புராசஸின் போது பச்சை மிளகாயை சாப்பிடாமல் தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருந்தார் லாஸ்லியா. அப்போதும் சிரிக்காதீங்க லாஸ்லியா, சீரியஸா இருங்க என்று எச்சரித்தார் பிக்பாஸ்.

    English summary
    Biggboss insulted Losliya in confession room while nomination process.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X