பிக்பாஸ்: ஐஸ்வர்யாவை காப்பாற்ற மாஸ்டர் பிளான்! ஓ கதை இப்படிப் போகுதா…?

ஐஸ்வர்யாவை காப்பாற்ற பிக்பாஸ் மாஸ்டர் பிளான்.

சென்னை: ஐஸ்வர்யாவை டைட்டில் வின்னராக்க பிக்பாஸ் போடும் திட்டம் தெரியவந்துள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் யார் பிக்பாஸ் டைட்டிலைத் தட்டிச் செல்ல போகிறார்கள் என எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இதற்கு முன்பு பிக்பாஸால் திட்டமிட்டு காப்பாற்றப்பட்ட ஐஸ்வர்யாவே டைட்டிலை தட்டிச்செல்ல அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மக்கள் எண்ணம்

மக்கள் எண்ணம்

இன்று பாலாஜியும், யாஷிகாவும் வெளியேறுகின்றனர். அப்படி அவர்கள் வெளியேறும் பட்சத்தில் ஐஸ்வர்யா, ஜனனி, ரித்விகா மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் உள்ளே இருப்பார்கள். எப்போதுமே இதுபோன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று வரும்போது தமிழ்நாட்டு போட்டியாளர்களுக்குத்தான் மக்கள் வாக்களிக்க நினைப்பார்கள்.

முன்னிலை

முன்னிலை

இப்போது மேற்குறிப்பிட்ட நான்கு பேரில் ஐஸ்வர்யா மட்டுமே வட இந்தியப் பெண். மற்ற மூவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். ஐஸ்வர்யாவை பிடிக்கவில்லை என மக்கள் ஓட்டளிக்காமல் இருந்தாலும், அவரே முன்னிலையில் இருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

வாக்கு பிரியும்

வாக்கு பிரியும்

காரணம் என்னவென்றால், தமிழ்நாட்டுப் பெண்கள் என்று வரும்போது மூவர் உள்ளனர். ஆனால் வட இந்தியப் பெண்ணாக ஐஸ்வார்யா மட்டுமே உள்ளார். தமிழக ரசிகர்கள் நான்.. ஐஸ்வர்யாக்கு போடமாட்டேன், விஜிக்குதான் போடுவேன், நான் ஜனனிக்குதான் போடுவேன், என் ஓட்டு ரித்விகாவுக்குத்தாம்ப்பா என்றெல்லாம் சண்டையிட்டு வாக்களிக்கும் போது வாக்குகள் பிரியும். ஐஸ்வர்யா குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றாலும், வெற்றிபெறுவார்.

ஒற்றுமை

ஒற்றுமை

இதை எப்படி அரசியலோடு தொடர்பு படுத்தலாம் என ரூம் போட்டு யோசித்து பற்றாக்குறைக்கு கமலும் நம்மை படுத்துவார். தமிழர்கள் ஒற்றுமையாக இல்லாமல் இஷ்டத்திற்கு வாக்களிப்பதனால்தான் நல்லவர்கள் ஆட்சிக்கு வரமால் யார் யாரோ ஆட்சிக்கு வருகிறார்கள் என சொல்வதற்கும் வாய்ப்புகள் உண்டு. அதனால் பாத்து ஒழுங்கா குத்திவிடுங்க எசமான்.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

இந்த நிகழ்ச்சியைப் பொருத்தவரை ஆரம்பத்திலிருந்தே கமல்ஹாசனின் சுதந்திரம் பறிபோனதை நாம் மறுக்க முடியாது. முதல் சீசனில் யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஆளுமையாகவே இருந்தார். அவர் நினைத்தால் தான் விவோ என்ற பிராண்டையே சொல்வார். ஆனால் இப்போது அப்படி இல்லை. எல்லாம் தலைகுப்புற கவிழ்ந்து கிடக்கிறது. முழு சுதந்திரத்தோடு நடத்த முடியாமல் போனதற்காக நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொண்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X