புரமோல காண்பிச்ச சண்டையெல்லாம் காணோம்.. எங்களை எல்லாம் பாத்தா உங்களுக்கு எப்படி தெரியுது? #பிக்பாஸ்2
பிக்பாஸ் நிகழ்ச்சியில் புரமோவில் காண்பிப்பது ஒன்றும் நிகழ்ச்சியில் காண்பிப்பது ஒன்றுமாக இருப்பது ரசிகர்களிடையே சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் புரமோவில் காண்பிப்பது ஒன்றும் நிகழ்ச்சியில் காண்பிப்பது ஒன்றுமாக இருப்பது ரசிகர்களிடையே சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் சுவாரசியத்திற்கு பஞ்சம் ஏற்பட்டாலும் சண்டைக்கு பஞ்சமே இல்லை. ஒரே வீட்டில் இருக்கும் இரு அணிகள் இரு நாட்டு எதிரிகளை போல் நடந்து கொள்கின்றனர்.
பிக்பாஸ் ஒன்றுடன் ஒப்பிடும்போது பிக்பாஸ் 2 மக்களிடையே எந்த ஒரு வரவேற்பையும் பெறவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சண்டைகளை வைத்தே எபிசோடை நகர்த்தி வருகிறார் நிகழ்ச்சி தயாரிப்பாளர்.

நிகழ்ச்சியில் மிஸ்ஸிங்
அதற்காக புரமோவில் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சண்டை காட்சிகளை காட்டி மக்கள் கூட்டத்தை கூட்டும் தயாரிப்பு குழு அவற்றை நிகழ்ச்சியில் ஒளிபரப்புவதில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
பாத்ரூம் உரிமை
ப்ளூ டீமோ, யெல்லோ டீமோ.. யார் நாளை காலைக்குள் யாராவது ஒருவரை அடித்து துவைக்கிறாரோ அவருக்கு பாத்-ரூம் உரிமையாகும்! #பிக்பாஸ்2 கேவலங்கள்!
நாங்களும் பாக்குறோம்
- உண்மையா நான் கேம் தொடவே இல்ல - மும்தாஜ்.
- நான் உண்மைதான் பேசுவேன் - மும்தாஜ்.
- மும்தாஜ் ரொம்ப ஓப்பன், மனசுல பட்டதுதான் பேசுவாங்க - மும்தாஜ் பேன்ஸ்.
நாங்களும் பிக்பாஸ் பாத்துட்டுதான் இருக்கோம் - மக்கள்.
உண்மையா உள்ள ஆள்
பொய்யும், புரட்டும் நிறைஞ்ச பிக்பாஸ் வீட்டுல உண்மையா இருக்க ஒரே ஆள் தலைவி ஐஸ் என்றால் அது மிகையல்ல
ஓவியா மாதிரி
இந்த பிக்பாஸ் 2 வை பொறுத்தவரைக்கும் ஆணவம் இருந்தே ஆகவேண்டும் அப்பதான் இந்த பிராடு பசங்களை சமாளிக்க முடியும் இது ஒன்னும் பிக்பாஸ் 1இல்லை ஓவியா மாதிரி வெகுளியா இருக்கறதுக்கு
திராணியில்லை
கலாச்சார சீர்கேட்டை, கச்சிதமாக செய்து கொண்டிருக்கும், # பிக்பாஸ்# நிகழ்ச்சிகளை தடைசெய்ய மாநில அரசுக்கு , திராணியில்லை.?
எப்படி தெரியுது?
எங்கடா புரமோல காண்பிச்ச சண்டையெல்லாம் காணோம்.. எங்களை எல்லாம் பாத்தா உங்களுக்கு எப்படி தெரியுது


Click it and Unblock the Notifications











