அப்போ இந்த வாரம் சாக்ஷி எலிமினேட் இல்லையா? நல்லா பண்றீங்க பாஸ்!

Recommended Video

Bigg Boss 3 Tamil: Day 12: Promo 1: காதலிக்கும் பையன் சொல்வதை கவனிப்பேன் Sakshi- வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சாக்ஷி அகர்வாலும் கவினும் காதலிக்க தொடங்கிவிட்டதால் அவர் இந்த வாரம் எலிமினேட் ஆவது கேள்விக்குறியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் புராசஸ் கடந்த திங்கள் கிழமை தொடங்கியது. இதற்காக ஹவுஸ் மேட்ஸ் தலா இரண்டு உறுப்பினர்களின் பெயர்களை நாமினேஷன் செய்தனர்.

அதன்படி கவின், சாக்ஷி, மதுமிதா, ஃபாத்திமா பாபு, மீரா மிதுன், சரவணன், சேரன் ஆகியோரின் பெயர்கள் எவிக்ஷன் லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளது. இவர்களில் யார் மிகக்குறைந்த வாக்குகளை பெறுகிறார்களோ அவர்களே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.

கடைசியில் சாக்ஷி

கடைசியில் சாக்ஷி

இதுவரை பதிவான வாக்குகளின் படி மதுமிதா அதிக வாக்குகள் பெற்று சேஃப் ஸோன்குள் வந்துவிட்டார். கடைசி இடத்தில் இருப்பது சாக்ஷி அகர்வால்தான்.

போட்டுக்கொடுத்த சாக்ஷி

போட்டுக்கொடுத்த சாக்ஷி

இதற்கான காரணம், அரைகுறையாக ஒட்டுக்கேட்டுவிட்டு மீரா குறித்து தனது கேங்கிடம் இல்லாததை கூறினார சாக்ஷி. கடைசியில் அவர்களின் சண்டை பசிக்கு தீனியானவர் மதுமிதா.

குறும்படம் வருமா?

குறும்படம் வருமா?

பிக்பாஸ் வீட்டில் பெரும் பிரளயம் வெடிக்கவும், மதுமிதா தனிமைப்படுத்தப்படவும் மன அழுத்தத்திற்கு ஆளாகவும் காரணமாக இருந்தவர் இந்த சாக்ஷிதான். இதனால் அவருக்கு ஓட்டு போடாமல் புறக்கணித்து வரும் ரசிகர்கள் இதற்கான குறும்படம் வருமா என ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

கொதித்துள்ள ரசிகர்கள்

கொதித்துள்ள ரசிகர்கள்

இந்நிலையில் கவினும் சாக்ஷியும் காதலிக்க தொடங்கியுள்ளதாக புரமோ வெளியிட்டுள்ளார் பிக்பாஸ். இதனை பார்த்து ரசிகர்கள் கொதித்து போயுள்ளனர்.

கன்டென்ட் கொடுப்பவர்

கன்டென்ட் கொடுப்பவர்

பிக்பாஸை பொறுத்தவரை கன்டென்ட் கொடுப்பவர்களை அவ்வளவு எளிதில் வெளியேற்றிவிட மாட்டார்கள். இதனை முதல் சீசன் முதல் நாம் பார்த்து வருகிறோம்.

ஐஸ்வர்யா தத்தா

ஐஸ்வர்யா தத்தா

முதல் சீசனில் ஜூலியை கடைசி வரை பிக்பாஸ் வீட்டில் தங்க வைத்து மக்களின் பிபியை ஏற்றினார். இதேபோல் கடந்த சீசனில் ஐஸ்வர்யா தத்தாவை வீட்டில் வைத்து மக்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டார்.

சாக்ஷிக்காக நாடகம்

சாக்ஷிக்காக நாடகம்

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட் படிதான் நடக்கிறது என்ற பேச்சு முதல் சீசன் முதலே இருந்து வருகிறது. தற்போது சாக்ஷியை வைத்துக்கொள்ளவே பிக்பாஸ் இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறார் என கொந்தளித்துள்ளனர் ரசிகர்கள்.

தினமும் அடித்துக்கொள்வார்கள்

தினமும் அடித்துக்கொள்வார்கள்

இல்லாததையும் பொல்லாததையும் கோல்மூட்ட பிக்பாஸ் வீட்டிற்கு சாக்ஷி போன்ற ஒருவர் தேவைதான். அப்போதுதான் தினமும் அடித்துக்கொள்வார்கள், பிக்பாஸ் வீடு கொந்தளிக்கும், டிஆர்பி எகிறும், இந்தக் காரணத்திற்காகதான் இப்போது இப்படி ஒரு கதையை ஆரம்பித்திருக்கிறார் பிக்பாஸ் என்ற பேச்சு எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X