வந்தாள் மகாலட்சுமியே.. என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே.. பிக்பாஸ் வேக்அப் பாட்ட கவனிச்சீங்களா?

சென்னை: பிக்பாஸ் வீட்டில் நேற்று காலை போடப்பட்ட வேக் அப் பாடல் யாருக்காக என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஜூன் 23ஆம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. 50 நாட்களை கடந்த விட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி அவ்வப்பபோது படு சூடாகவும், சில நேரம் மொக்கையாகவும் செல்கிறது.

கடந்த சீசன்களை போலவே இந்த சீசனிலும் காலையில் வேக் அப் பாடல் ஒளிபரப்பப்படுகிறது. ஒவ்வோரு நாளும் ஒவ்வொரு மாதிரியான பாடல் ஒலிபரப்படுகிறது.

பாடல்களை கேட்டப்படி

பாடல்களை கேட்டப்படி

பழைய பாடல்கள், புதுப்பாடல்கள், இடைப்பட்ட காலத்தில் வந்த பாடல்கள் என ஒலிபரப்பப்படுகிறது. அந்தப் பாடல்களை கேட்டப்படிதான் ஹவுஸ்மேட்ஸ்கள் போர்வைக்குள் இருந்து வெளியே வருவார்கள்.

ஊரு விட்டு ஊரு வந்து

ஊரு விட்டு ஊரு வந்து

சிலர் பாடல்களுக்கு ஏற்றப்படி டான்ஸ் ஆடுவார்கள். பல நேரங்களில் அந்த பாடல் சூழ்நிலைக்கு ஏற்ப அமைந்துவிடும்.
குறிப்பாக கவின் காதல் வலையில் சிக்கி தவித்த போதெல்லாம் ஊரு விட்டு ஊரு வந்து காதல்கீதல் பண்ணாதீங்க என்ற பாடலை ஒலிபரப்பினார்கள்.

கவினுக்காக பாடல்

கவினுக்காக பாடல்

அதேபோல் இருமனம் கொண்ட திருமண வாழ்வில் இடையினில் நீயேன் மயங்குகிறாய் இளகிய பெண்மை இருவர் கை பொம்மை
ஏன் இன்னும் நீயும் ஏங்குகிறாய்.. என்ற பாடலும் கவினுக்காக ஒலிபரப்பப்பட்டதாக ஹவுஸ்மேட்ஸ்கள் கிண்டலடித்தனர்.

யாருக்காக?

யாருக்காக?

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் வேக் அப் பாடலாக போடப்பட்ட பாடல் யாருக்காக போடப்பட்ட பாடல் என்ற கேள்வி எழுந்துள்ளது.

என்றும் அவள் ஆட்சியே..

என்றும் அவள் ஆட்சியே..

அதாவது, நேற்று காலை வந்தாள் மகாலக்ஷ்மியே என்றும் அவள் ஆட்சியே வந்தாள் மகாலக்ஷ்மியே என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே.. அடியேனின் குடி வாழ தனம் வாழ குடிதனம் புக.. வந்தாள் மகாலக்ஷ்மியே என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே.. பக்தனின் வீட்டோடு தங்கிவிட்டாள்..
பண்டிகை நாள் பார்த்து பொங்கலிட்டாள்.. என்ற பாடல் ஒலிபரப்பானது.

படுத்த டிஆர்பி

படுத்த டிஆர்பி

நேற்று முன்தினம் தான் வனிதா விஜயகுமார் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி படுத்துவிட்டதால் சண்டை மூட்டிவிட வனிதாவை விருந்தாளியாக மீண்டும் அழைத்து வந்துள்ளார் பிக்பாஸ்.

நல்லா பண்றீங்க பிக்பாஸ்!

நல்லா பண்றீங்க பிக்பாஸ்!

பிக்பாஸ் எதிர்பார்த்தது போலவே வனிதா வந்த பிறகு பிக்பாஸ் வீடு சண்டை சச்சரவு என பற்றி எரிந்து வருகிறது. இதனால் நிகழ்ச்சியில் சுவாரசியம் கூடியுள்ளது. இதனை மனதில் வைத்து வனிதாவை மகாலக்ஷ்மியே என்று பாட்டு போட்டுள்ளார் பிக்பாஸ். நல்லா பண்றீங்க பிக்பாஸ்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X