நான் ஜாலியா இருந்த மாதிரி நீங்களும் ஜாலியா இருந்தீங்களா? ஹவுஸ்மேட்ஸை வச்சு செய்த பிக்பாஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் நாமினேஷன் புராசஸின் போது ஹவுஸ்மேட்ஸ்களை வச்சு செய்தார் பிக்பாஸ்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் நாமினேஷன் புராசஸ் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது.
இந்த வாரம் நாமினேஷன் புராசஸ் சற்று வித்தியாசமாக நடைபெற்றது. அதாவது காப்பாற்ற விரும்பும் நபர்களுக்காக ஹவுஸ்மேட்ஸ்கள் பச்சை மிளகாய் சாப்பிட வேண்டும்.

லாஸ்லியா விருப்பம்
எத்தனை பேரை காப்பாற்ற விரும்புகிறார்களோ அத்தனை பச்சை மிளகாய்களை சாப்பிட வேண்டும். அதன்படி நேற்றைய நாமினேஷன் புராசஸில் முதல் ஆளாக கன்ஃபெஷன் ரூமுக்குள் சென்ற லாஸ்லியா கவினை காப்பாற்ற விரும்புவதாக கூறினார்.

நீண்ட யோசனைக்குப் பிறகு
இதனை தொடர்ந்து பச்சை மிளகாயை சாப்பிட சொன்னார் பிக்பாஸ். இருப்பதிலேயே சிறிய மிளகாயை தேடி கண்டுபிடித்த லாஸ்லியா அதனை நீண்ட யோசனைக்கு பிறகு எடுத்து சாப்பிட்டார்.

தர்ஷன் இரண்டு மிளகாய்
லாஸ்லியாவை தொடர்ந்து கன்ஃபெஷன் ரூமுக்கு வந்த கவின் லாஸ்லியாவை மட்டும் காப்பாற்றுவதாக கூறி ஒரு பச்சை மிளகாயை சாப்பிட்டார். அவரை தொடர்ந்து ஷெரினையும் சாண்டியையும் காப்பாற்ற விரும்பிய தர்ஷன் இரண்டு பச்சை மிளகாயை சாப்பிட்டார்.

ஷெரின் 2 பச்சை மிளகாய்
பின்னர் வந்த சாண்டி கவினையும் லாஸ்லியாவையும் காப்பாற்றுவதாக கூறி இரண்டு பச்சை மிளகாயை சாப்பிட்டார். அவருக்கு பின் வந்த ஷெரின் தர்ஷனையும் சாண்டியையும் காப்பாற்ற விரும்புவதாக கூறி இரண்டு பச்சை மிளகாய்களை சாப்பிட்டார்.

முகெனுக்கு மூன்று மிளகாய்
கடைசியாக வந்த முகென் தர்ஷன், சாண்டி, ஷெரின் ஆகியோரை காப்பாற்றுவதாக கூறி மூன்று பச்சை மிளகாய்களை சாப்பிட்டார். சாண்டியை காப்பாற்றுவதாக கூறி இரண்டாவது பச்சை மிளகாயை சாப்பிட்டு முடித்த பிறகு, அவர் ஏற்கனவே காப்பாற்றப்பட்டுவிட்டார் வேறு யாரையாவது காப்பாற்றுங்கள் என்றார் பிக்பாஸ். உடனே ஷெரின் பேரை கூறிவிட்டு பட்டென மிளகாயை எடுத்து நறநறவென சாப்பிட்டார்.

நீங்க ஜாலியா இருந்தீங்களா?
பின்னர் அனைவரும் லிவிங் ஏரியாவில் அமர்ந்திருக்க, நாமினேஷன் புராசஸ் முடிந்ததாக கூறினார் பிக்பாஸ். மேலும் நாமினேஷன் புராசஸின் போது நான் ஜாலியாக இருந்தது போல் நீங்களும ஜாலியாக இருந்தீர்களா என்று கேட்டு வெறுப்பேற்றினார்.

கடுப்பேற்றிய பிக்பாஸ்
தொடர்ந்து யாரையும் காப்பாற்ற சாப்பிட்டிருக்க வேண்டாம், ஏனெனில் இது 14வது வாரம் என்பதால் எல்லோரும் டைரக்ட் நாமினேஷனில் இருக்கிறீர்கள் என்று கூறி கடுப்பேற்றினார். இதனை சற்றும் எதிர்பாராத ஹவுஸ்மேட்ஸ் பிக்பாஸை செல்லமாக கடிந்து கொண்டனர்.

ரசிக்க வைத்த பிக்பாஸ்
கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களிடம் நன்றாக விளையாடி வருகிறார். அடிக்கடி ஹவுஸ்மேட்ஸ்களை கலாய்ப்பது மொக்கை செய்வது என என்டெர்டெய்ன் செய்து வருகிறார் பிக்பாஸ். அவை அனைத்தும் ரசிக்கும்படியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











