வரலாற்றில் முதல் முறையாக.. ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பல்ப் கொடுத்து காமெடி செய்யும் பிக்பாஸ்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 89 : Sandy and losliya fight

சென்னை: போட்டியாளர்களை அவ்வப்போது மொக்கை செய்து கூடவே காமெடியும் செய்து வருகிறார் பிக்பாஸ்.

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனும் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்வையாளர்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ, பிக்பாஸின் குரலை பிடிக்காதவர்கள் நிச்சயம் இருக்க முடியாது. அப்படியான கவர்ச்சி மிகு காந்தக்குரல் பிக்பாஸுக்கு.

ரசிக்காமலா இருப்பார்கள்?

ரசிக்காமலா இருப்பார்கள்?

கணீர் என்று ஒலிக்கும் பிக்பாஸின் குரலை ரசிக்கவே ஒரு கூட்டம் உள்ளது. எப்போதும் ஸ்ட்ரிக்ட்டாக ஒலிக்கும் பிக்பாஸின் குரலில், கொஞ்சம் விளையாட்டும் காமெடியும் கலந்தால் பார்வையாளர்கள் ரசிக்காமலா இருப்பார்கள்?

மொக்கையாக்கும் பிக்பாஸ்

மொக்கையாக்கும் பிக்பாஸ்

ஆம், கடந்த இரண்டு சீசன்களிலும் செய்யாத வேலையை இந்த சீசனில் செய்து வருகிறார் பிக்பாஸ். கடந்த சில நாட்களாக ஹவுஸ்மேட்ஸ்கள் அணிந்திருக்கும் மைக்கை சரிசெய்யும்படி தனது ஸ்டைலில் கூறி மொக்கை செய்து வருகிறார் பிக்பாஸ்.

சாண்டி மொக்கை

சாண்டி மொக்கை

அதன்படி சாண்டியையும் லாஸ்லியாவையுமே வச்சு செய்து வருகிறார் பிக்பாஸ். நேற்று முன்தினம், நான் பவர் கொடுக்கப்போகிறேன் என்று சாண்டி சக ஹவுஸ்மேட்களுடன் மொக்கை போட்டுக்கொண்டிருந்தார்.

சாண்டியை கலாய்த்த பிக்பாஸ்

சாண்டியை கலாய்த்த பிக்பாஸ்

அப்போது, குறுக்கிட்ட பிக்பாஸ், சாண்டி என்ன பவர் கொடுக்கிறதா இருந்தாலும் மைக்கை சரியா மாட்டிட்டு கொடுங்க என்றார். அதற்கு முன்பும் கூட ஒரு நாள், சாண்டியிடம் மைக்கை மாட்டுறது முக்கியமில்ல அதை எப்படி மாட்றோம்ங்றதுதான் முக்கியம் என்றார் பிக்பாஸ்.

ரூல்ஸ ஃபாலோ பண்ணுவேன்

ரூல்ஸ ஃபாலோ பண்ணுவேன்

லாஸ்லியாவிடமும் இப்படி விளையாடியிருக்கிறார் பிக்பாஸ். நான் எப்போதும் ரூல்ஸை மதிப்பேன், பிக்பாஸின் எந்த ரூல்ஸையும் இதுவரை பின்பற்றாமல் இருந்ததில்லை என்று பெட்டில் படுத்துக்கொண்டு கூறனார் லாஸ்லியா.

துள்ளிக்குதித்த ஹவுஸ்மேட்ஸ்

துள்ளிக்குதித்த ஹவுஸ்மேட்ஸ்

இதனைக்கேட்ட பிக்பாஸ், லாஸ்லியா, நீங்கதான் ரூல்ஸ சரியா ஃபாலோ பண்ணுவீங்களே மைக்கை ஒழுங்கா மாட்டுங்க என்றார். பிக்பாஸ் அசிங்கப்படுத்தியதால் துள்ளிக்குதித்தனர் மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள்.

நீங்க அழகா இருக்கீங்க

நீங்க அழகா இருக்கீங்க

நேற்று முன்தினம் கூட ஐயா முகென், கன்ஃபெஷன் ரூமுக்கு வாங்கய்யா என்று அழைத்து கலாய்த்தார் பிக்பாஸ். நேற்றைய எபிசோடில் ஷெரினை, நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று கூறி விளையாடினார் பிக்பாஸ்.

ரசிக்கும் பார்வையாளர்கள்

ரசிக்கும் பார்வையாளர்கள்

எப்போதும் ஸ்ட்ரிக்ட்டாக இருக்கும் பிக்பாஸ், அவ்வப்போது இப்படி காமெடி செய்வதை ஹவுஸ்மேட்ஸ்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் ரசித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X