வனிதா கெத்துதான்... இல்லாட்டி அவரே அழைத்து பேசி சமாதானப்படுத்தியிருப்பாரா!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 73 : Sakshi & Mohan came for revenge House mates

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கோபமான வனிதாவை பிக்பாஸே அழைத்து சமாதானப்படுத்தினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த திங்கள் கிழமை ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. பிக்பாஸ் வீடு எப்போதெல்லாம் பிரச்சனை இல்லாமல் அமைதியாக இருக்கிறதோ அப்போதெல்லாம் ஓபன் நாமினேஷன் கொடுத்து கொளுத்தி போடுவது பிக்பாஸின் வேலை.

திங்கள் கிழமை ஒளிபரப்பான எபிசோடில் நடைபெற்ற ஓபன் நாமினேஷனில் தொடங்கியது பிரச்சனை. கவின், சேரனையும் ஷெரினையும் நாமினேட் செய்தார்.

வழிவிட வேண்டும்

வழிவிட வேண்டும்

அதற்காக அவர் சொன்ன காரணங்கள் இருவரும் ஏற்கனவே பெயரும் புகழும் பெற்று பெரும் வெற்றியாளர்களாக உள்ளனர். ஆகையால் அவர்கள், வெற்றி என்றால் என்னவென்றே தெரியாத தர்ஷன், முகென், சாண்டி மற்றும் லாஸ்லியாவுக்கு வழிவிட வேண்டும் என்றார்.

மீண்டும் பிரிந்த வீடு

மீண்டும் பிரிந்த வீடு

இது ஒரு காரணமல்ல என்று கூறிய வனிதா, இருவரும் புகழ் பெற்றவர்கள் என்பதால்தானே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்துள்ளனர் என்று கேட்டு வாக்குவாதம் செய்தார். இதனால் பேச்சு முற்றி மீண்டும் பிக்பாஸ் வீடு இரண்டாக பிரிந்தது.

மைக்கை கழட்டிய வனிதா

மைக்கை கழட்டிய வனிதா

கவினின் காரணத்தை ஏற்காத வனிதா, ரூல்ஸ் தெளிவாக தெரியும் வரை விளையாடப் போவதில்லை என்று கூறி மைக் கழட்டி தொங்கவிட்டார். பிக்பாஸ் விதிகளை சொல்லும் வரை மைக்கை மாட்டப்போவதில்லை என்றும் பிடிவாதமாக இருந்தார் வனிதா.

கன்ஃபெஷன் ரூமுக்கு அழைப்பு

கன்ஃபெஷன் ரூமுக்கு அழைப்பு

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் வனிதாவை மைக்கை போடும்படி கூறிய பிக்பாஸ் , கன்ஃபெஷன் ரூமுக்கு வருமாறு அழைத்தார். பிக்பாஸிடம் இருந்து ரெஸ்பான்ஸ் வந்தவுடன் மைக்கை மாட்டிக்கொண்ட வனிதா, கன்ஃபெஷன் ரூமுக்கு சென்றார்.

மக்கள் இதையும் பார்ப்பார்கள்

மக்கள் இதையும் பார்ப்பார்கள்

அங்கு வனிதாவிடம் பேசிய பிக்பாஸ் பிரச்சனையை கேட்டறிந்தார். வனிதா தனது தரப்பு நியாயத்தை கூறவே, இதுவரை நடந்ததை பார்த்த மக்கள் இதையும் பார்ப்பார்கள் என்று கூறி வனிதாவை சமாதானப்படுத்தினார் பிக்பாஸ்.

மைக்கை மாட்டிய வனிதா

மைக்கை மாட்டிய வனிதா

ஏற்கனவே தர்ஷனுடன் ஏற்பட்ட பிரச்சனையின் போது மைக்கை கழட்டிய வனிதா பிக்பாஸ் என்னை அழைத்து பேச வேண்டும் என்றார். ஆனால் பிக்பாஸ் அழைக்காததால் தானாகவே மைக்கை எடுத்து மாட்டிக்கொண்டார்.

வனிதா கெத்துதான்

வனிதா கெத்துதான்

இந்நிலையில் தற்போது வைல்டு கார்டு என்ட்ரியாக வந்துள்ள வனிதாவை பிக்பாஸ் அழைத்து பேசியிருப்பதை பார்த்த ரசிகர்கள் வனிதா கெத்துதான் என புகழ்ந்து வருகின்றனர். வினிதா வந்த பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் சுவாரசியம் கூடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X