இதெல்லாம் ஒரு வேலையா.. கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்.. புரமோவை மாற்றிய பிக்பாஸ்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 2 : Day 96 : கவினை தாறுமாறாக மிஸ் செய்யும் சாண்டி லாஸ்-வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்ஸ் கழுவி ஊற்றியதை தொடர்ந்து, புரமோ மாற்றப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ வழக்கம் போல இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது. இதில் கவின் போன பிறகு சோகத்தில் இருந்த லாஸ்லியாவுக்கு தர்ஷன் ஆறுதல் கூறுவது காட்டப்பட்டது.

இதனை பார்த்த நெட்டிசன்கள், என்னய்யா பழசையே இன்னும் ஓட்றீங்க என மரண கலாய் கலாய்த்தனர். மேலும் இதை வைத்து இன்னும் எத்தனை நாட்களுக்கு ஓட்டப்போகிறீர்கள், கன்டென்ட் கிடைக்கலயா என்றும் கழுவி ஊற்றினர்.

முதல் புரமோ நீக்கம்

முதல் புரமோ நீக்கம்

இதைத்தொடர்ந்து காலையில் போட்ட புரமோவை நீக்கிவிட்டு புரமோ 2 என்று புதிய புரமோவை ஒளிபரப்பியுள்ளனர். அதில் கவின் போனது குறித்த சாண்டி சோக கீதம் வாசிக்கிறார்.

சாண்டி சோகக் கீதம்

சாண்டி சோகக் கீதம்

இரண்டாவது புரமோவில் சாண்டி, கவின் போனது குறித்து பேசுகிறார். கவினை தான் கொஞ்ச நஞ்சம் மிஸ் பண்ணவில்லை. ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன். கவினுடைய வின்னர் மெடல் இங்குதான் இருக்கிறது. ஃபைனல்ஸ் போகும் போது அதை நான் எடுத்து செல்வேன்.

மிஸ் யூ.. லவ் யூ..

மிஸ் யூ.. லவ் யூ..

கவின் நீ இங்கு இல்லாவிட்டாலும் என் மனதில் இருக்கிறாய். வெளியே வந்து பயங்கரமா கேள்வி கேட்பேன் அதுக்கு நீ தயாரா இரு, மிஸ் யூ, லவ் யூ என்று கூறுகிறார் சாண்டி. இப்படியாக முடிகிறது இரண்டாவது புரமோ.

எதுக்கு இந்த டாஸ்க்

இந்த புரமோவை பார்த்தும் நெட்டிசன்ஸ் கடுப்பாகியுள்ளனர். அதான் போய்விட்டானே பின் எதற்கு இந்த துக்கம் விசாரிக்கும் டாஸ்க்கெல்லாம் என்று கேட்டு விளாசி வருகின்றனர்.

அசத்துறாரே

மேலும் சிலர் கவின் வெளியே போன பிறகு பிக்பாஸ் ரொம்ப சுறுசுறுப்பாயிட்டாறு இவ்ளோ சீக்கிரம் இரண்டாவது புரமோவை போட்டு அசத்துறாரே என்றும் கமென்ட்டுகள் பதிவாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X