என்னை பொறுத்தவரைக்கும் அவர்தான் டைட்டில் வின்னர்.. கவினை தூக்கி வைத்து ஆடும் பிக்பாஸ் பிரபலம்!
Recommended Video
சென்னை: தன்னை பொறுத்தவரை கவின்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் என பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ரேஷ்மா தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் 15 போட்டியாளர்களில் ஒருவர் ரேஷ்மா. டிவி சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்துள்ள ரேஷ்மா, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நடித்த புஷ்பா கதாபாத்திரத்தின் மூலம் பெரும் பிரபலமானார் ரேஷ்மா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் பகிர்ந்துகொண்ட அவரது பர்சனல் நிகழ்வுகள் பார்வையாளர்களிடையே அவர் மீது அனுதாபத்தை ஏற்படுத்தியது.

ரேஷ்மா மீது வெறுப்பு
ஆனால் சேரன் டாஸ்க்குகாக செய்கிறார் என்பதை அறியாமல் அவரை நீதான்டா லூசு என்றார் ரேஷ்மா. இதனால் மக்களுக்கு ரேஷ்மா மீது வெறுப்பு ஏற்பட்டது. அடுத்த சில வாரங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நாமினேஷன் முறையில் வெளியேற்றப்பட்டார்.

கவின் குறித்து டிவிட்
பிக்பாஸில் இருந்து வெளியே வந்த நாள் முதல் போட்டோ ஷுட் நடத்தி விதவிதமான போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து கவின் வெளியேறியது குறித்து ரேஷ்மா டிவிட்டியுள்ளார்.
கவின்தான் வின்னர்
அவரது டிவிட்டில் பதிவிட்டிருப்பதாவது, நான் கவினின் முடிவை முழுமையாக ஆதரிக்கிறேன், அவர் ஒரு அற்புதமான மனிதர். மற்றவர்கள் செய்யாததை அவர் செய்துவிட்டார். மற்றவர்களுக்கு இல்லாத துணிச்சல் கவினிடம் இருந்தது.
அதனை தியாகம் என்று சொன்னாலும் விட்டுக்கொடுக்கிறது என்று என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை. என்னைப் பொறுத்தவரை கவின்தான் டைட்டில் வின்னர். இவ்வாறு ரேஷ்மா தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.
நடத்துங்க நடத்துங்க
ரேஷ்மாவின் இந்த டிவிட்டை பார்த்த நெட்டிசன் ஒருவர் அட்டைன்ஷன் பெறுவதற்காக முயற்சி செய்கிறீர்கள்.. ஓகே நடத்துங்க நடத்துங்க என்று பதிலளித்திருந்தார்.
கடவுள்தான் காப்பாத்தனும்
இந்த பதிலை பார்த்த ரேஷ்மா, எனக்கு ஏற்கனவே நிறைய அட்டைன்ஷன் உள்ளது. புதிதாக ஒன்றும் தேவையில்லை புரோ. கவினுக்கு என மனமார்ந்த வாழ்த்துக்களை கூறினேன். அததையும் நீங்கள் கேவலப்படுத்தினால் உங்கள் சிந்தனைக்கு கடவுள்தான் உதவ வேண்டும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











