Don't Miss!
- News
என்ன அலட்சியம்! சிபிஐ விசாரணைக்கு மாற்றிவிடுவோம்! போலி ஆவணத்துக்கு இழப்பீடு! சென்னை ஐகோர்ட் வார்னிங்
- Lifestyle
உங்ககிட்ட இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க... இல்லன்னா உணவுக்குழாய் புற்றுநோய் வந்துடும்...
- Technology
ரெடியா? WhatsApp தலையெழுத்தை மாற்றப்போகும் 5 புது அம்சங்கள்! என்னென்ன தெரியுமா?
- Sports
ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம்.. ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்.. 4 இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு
- Automobiles
டொயோட்டாக்கு ஷாக் வைத்தியம் கொடுத்த இந்தியர்கள்.. நம்மாலையே நம்ம முடியல டொயோட்டாக்கு மட்டும் எப்படி இருக்கும்!
- Finance
பர்ஸ்-ஐ பதம் பார்த்த பட்ஜெட் 2023 அறிவிப்புகள்.. அட பாவமே..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தாளிச்சு கொட்டி இறக்குர வரைக்கும்.. ஒரே களேபரம்தாம்.. தெறிக்கவிடும் கமல்.. பிக்பாஸ் புதிய புரமோ!
சென்னை: பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான புதிய புரமோ வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசின் 5 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கப்படும் என தகவல் பரவி வருகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே பிக்பாஸ் லோகோவுக்கான புரமோ வெளியான நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சிக்கான புரமோ வெளியானது.
பிக்பாஸ் சீசன் 5 தமிழ்...களமிறங்க போகும் போட்டியாளர்களின் முதல் பட்டியல் இது தானா ?

கல்யாண வீடு கலாட்டா
இதில் கல்யாண வீட்டில் நடக்கும் கலாட்டாக்கள் காட்சியாக்கப்பட்டிருந்தது. புரமோவில் பேசிய கமல் ஹாசன் ஆயிரம் பொருத்தம் பார்த்து பண்ற கல்யாண வீட்டிலேயே இவ்ளோ கலாட்டா இருக்கும் போது என இழுத்து முடித்திருந்தார்.

வீடும் பெருசு கலாட்டாவும் பெருசு
மேலும் பிக்பாஸ் வீட்டை குறிப்பிட்டு இங்க வீடும் பெருசு கலாட்டாவும் பெருசு என்றும் எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று கூறி முடித்திருந்தார். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் நடிகர் கமல்ஹாசன் கிச்சனில் இருந்தப்படி வேலையை ஆரம்பித்துள்ளார்.

கடுகை போடும் கமல்
அதாவது கிச்சனில் நிற்கும் கமல் முதலில் அடுப்பை பற்ற வைக்கிறார். பின்னர் வானலை தூக்கி அடுப்பில் வைக்கும் கமல் எண்ணெய்யை ஊற்றிவிட்டு அதுவரைக்கும் எல்லாம் அமைதியா இருக்கணும் என்று கூறுகிறார். பின்னர் கடுகை போடும் கமல், கடுகை போட்டதும் ஆரம்பிக்கும் பாருங்க.. சரசரன்னு பொறியும் சுறுசுறுன்னு மிதங்கும், சலசலன்னு கொதிக்கும் கருகருன்னு தீயும்.

ஒரே களேபரம்தான் போங்க
பட்டுன்னு ஆவி அடிக்கும், சட்டுன்னு பொங்கும்.. தாளிச்சு கொட்டி இறக்கி வைக்கிற வரைக்கும்... ஸ்பா.. ஒரே களேபரம்தான் போங்க என்று கூறும் கமல், ஒரு பாஸ் விட்டு நான் சமையலை பற்றிதான் பேசுறேன்.. நீங்க என்ன நினைச்சீங்க.. என்று கேட்டப்படியே யப்பா.. இந்த வீட்டுல எதையுமே சுதந்திரமா பேச முடியாது போல்ருக்கே என்று கூறி காய்களை வெட்டுகிறார். இப்படியாக உள்ளது இரண்டாவது புரமோ.

குக் வித் கோமாளி சீசன் 3 புரமோஷனா?
இதனை பார்த்த நெட்டிசன்கள் இது பிக்பாஸ் புரமோவா இல்ல குக் வித் கோமாளி சீசன் 3 புரமோஷனா என கேட்டு கலாய்த்துள்ளனர். அதே நேரத்தில் இந்த சீசனில் புரமோவெல்லாம் வேற லெவலில் உள்ளது. அதேபோல் நிகழ்ச்சியும் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் பாராட்டியுள்ளனர் நெட்டிசன்கள்.