பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே கோலாகலமாக தொடங்கியது பிக் பாஸ் சீசன் 5... அசத்தல் லுக்கில் கமல்ஹாசன்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் டிவியில் இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது.

விஜய் டிவியில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 4 சீசன்கள் நிறைவடைந்துள்ளன.

நான்கு சீசன்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் சின்னத்திரையின் ஹிட் ஷோவாக பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கப்பட்டு வருகிறது.

இன்று முதல் பிக்பாஸ் சீசன் 5

இன்று முதல் பிக்பாஸ் சீசன் 5

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று முதல் தொடங்கியுள்ளது. முதல் மூன்று சீசன்கள் ஜூன் மாதங்களில் தொடங்கியது. ஆனால் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது.

கொரோனாவால் தாமதம்

கொரோனாவால் தாமதம்

100 நாட்களுக்கு மேல் நடைபெற்ற இந்நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் நிறைவு பெற்றது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை ஜூனில் தொடங்க நிகழ்ச்சி குழு முடிவு செய்தது. ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது.

தொகுத்து வழங்கும் கமல்

தொகுத்து வழங்கும் கமல்

இந்நிலையில் இன்று முதல் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இந்த சீசனையும் கடந்த 4 சீசன்களை போல் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். இன்றைய நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நேற்றே முடிந்ததால் போட்டியாளர்கள் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

போட்டியாளர்கள் குறித்த தகவல்

போட்டியாளர்கள் குறித்த தகவல்

அதன்படி இந்த முறை 18 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். அவர்களில் கானா இசைவாணி (பாடகி) 2. ராஜு ஜெயமோகன் (சின்னத்திரை நடிகர்) 3. மதுமிதா (காஸ்ட்யூம் டிசைனர்) 4. அபிஷேக் ராஜா ( விமர்சகர்) 5. அக்ஷரா ரெட்டி (மாடல்) 6. நமிதா மாரிமுத்து (திருநங்கை) 7. ப்ரீத்தி சஞ்சீவ் (சின்னத்திரை நடிகை) 8. பிரியங்கா தேஷ்பாண்டே (விஜே) 9. நிழல்கள் ரவி (நடிகர்) 10. பவானி ரெட்டி (மாடல், சீரியல் நடிகை) 11. கோபிநாத் (மாடல்) 12. நிருப் நந்தகுமார் (நடிகர்) ஆகியோரின் பெயர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

ஹாலிவுட் ஸ்டார் போல கமல்

ஹாலிவுட் ஸ்டார் போல கமல்

எஞ்சியுள்ள 6 போட்டியாளர்கள் யார் என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரிந்து விடும். ஆட்டம் பாட்டம் என கலக்கலாக தொடங்கியுள்ளது பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சி. இதில் தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன், ஹாலிவுட் ஸ்டார் போல் உடையணிந்து கலக்கியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X