என்ன போட்டோ இது பிக்பாஸ்.. இதான் ஈயம் பூசுன மாதிரியும் இருக்கனும் பூசாத மாதிரியும் இருக்கனும்!

சென்னை: பிக்பாஸின் போட்டோவை பார்க்க விரும்பிய போட்டியாளர்களுக்கு பெரிய பல்ப் ஒன்றை கொடுத்தார் பிக்பாஸ்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வெள்ளிக்கிழமை கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் ஒவ்வொரு பந்திலும் ஒரு பரிசு ஒட்டப்பட்டு இருந்தது. அந்த பாலை காலால் உடைத்த கோல் போஸ்ட்டுக்குள் அனுப்புவர்களுக்கு அந்த பாலில் ஒட்டப்பட்ட பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி பந்துகளில், கிரில் சிக்கன், பரோட்டா சிக்கன், ஸ்பா என ஒவ்வொருவரின் பந்திலிம் எழுதப்பட்டிருந்தது. அதன்படி லாஸ்லியாவின் பாலில் பிக்பாஸின் போட்டோவும் கையெழுத்தும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்து.

ஷெரினுக்கு ஸ்பா

ஷெரினுக்கு ஸ்பா

ஷெரின் தனது பாலை சரியாக போஸ்ட்டுக்குள் அனுப்பியதால் அவருக்கு நேற்று ஸ்பா வழங்கப்பட்டது. இதேபோல் லாஸ்லியாவும் தனது பாலை சரியாக போஸ்ட்டுக்குள் எட்டி உதைத்தார்.

காத்திருந்த போட்டியாளர்கள்

காத்திருந்த போட்டியாளர்கள்

இதனால் பிக்பாஸின் போட்டோ கிடைக்கும், அவரது முகத்தை பார்த்துவிடலாம் என ஆர்வமாக இருந்தனர் ஹவுஸ்மேட்ஸ்கள். இதுவரை பிக்பாஸின் குரலை மட்டுமே கேட்டுவந்த பார்வையயாளர்களும், அவரது முகத்தை கண்டுவிடலாம் என காத்திருந்தனர்.

தனியா போய் பார்க்கவா?

தனியா போய் பார்க்கவா?

நேற்றைய எபிசோடில் ஸ்டோர் ரூமில் கிஃப்ட் ராப் செய்யப்பட்ட போட்டோ வைக்கப்பட்டு லாஸ்லியாவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை எடுத்துவந்த லாஸ்லியா, இந்த போட்டோவை எடுத்துப்போய் தனியாக வைத்து பிரித்து பார்க்கவா என்று கேட்டார்.

நிழல் போன்ற உருவம்

நிழல் போன்ற உருவம்

அதற்கு சாண்டி நாங்களும் தான் பார்க்கவேண்டும் எல்லாருக்கும் முன்பு பிரி என்றார். இதைத்தொடர்ந்து பெரிய சஸ்பென்ஸ்க்கு பிறகு போட்டோவை பிரித்தனர். ஆனால் அதில் பிக்பாஸில் நிழல் போன்ற உருவம் மட்டுமே இருந்தது.

பெரும் ஏமாற்றம்

பெரும் ஏமாற்றம்

எந்த கோணத்தில் வைத்து பார்த்தாலும் பிக்பாஸின் முகம் தெரியவில்லை. இதனால் என்ன இது பிக்பாஸ்.. என்று நொந்து கொண்டனர் ஹவுஸ்மேட்ஸ்கள். பிக்பாஸை பார்க்க ஆர்வமாய் இருந்த பார்வையாளர்களும் அந்த போட்டோவை பார்த்து ஏமாற்றமடைந்தனர்.

ஈயம் பூசுன மாதிரியும்..

ஈயம் பூசுன மாதிரியும்..

போட்டோவும் அனுப்ப வேண்டும், ஆனால் பிக்பாஸின் முகமும் தெரியக்கூடாது என திட்டம் போட்டு அப்படியொரு போட்டோவை அனுப்பியிருக்கிறார் பிக்பாஸ். இதற்கு பெயர்தான் ஈயம் பூசுனா மாதிரியும் இருக்கனும் பூசாத மாதிரியும் இருக்கனும் என்பதா பிக்பாஸ்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X