அப்போ புரியல.. இப்போ புரியுது.. தர்ஷன் வெளியேற்றம்.. வைரலாகும் ஷெரின் வீடியோ!

Recommended Video

லாஸ்லியாவுக்காக வெளியேற்றப்பட போகும் தர்ஷன்... ஷாக் தரும் பின்னணி!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் வெளியேறிய தகவலை தொடர்ந்து ஷெரினின் வீடியோ வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் தர்ஷன் வெளியேறிவிட்டதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தர்ஷன் வெளியேற்றப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் விஜய்டிவியையும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கடந்த வாரம் சேரன் வெளியேற்றப்பட்டதே மக்களின் விருப்பத்திற்கு எதிராக என மக்கள் கருத்து தெரிவித்து வந்தனர்

ட்ரென்டிங்

ட்ரென்டிங்

தர்ஷன் வெளியேற்றத்தால் கடுப்பான ரசிகர்கள் விஜய் டிவிக்கு எதிராக #RedLightChannelVijayTV என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் ட்ரென்ட்டிங்கில் டாப்பில் உள்ளது.

ஒருதலைக் காதல்

ஒருதலைக் காதல்

பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை தர்ஷனும் ஷெரினும் நல்ல நண்பர்களாக இருந்தனர். ஷெரினுக்கு தர்ஷன் மீது ஒரு தலையாக காதல் இருந்தபோதும், தர்ஷனுக்கு வெளியில் காதலி இருப்பதை அறிந்து அதனை வெளிப்படுத்தாமல் இருந்து வந்தார்.

தர்ஷன் சப்போர்ட்

தர்ஷன் சப்போர்ட்

பிக்பாஸ் கொடுத்த கடிதம் எழுதும் டாஸ்க்கின் போது கூட ஷெரின், தர்ஷனுக்குதான் கடிதம் எழுதினார் ஷெரின். தர்ஷனும் எந்த பிரச்சனையானாலும் ஷெரினுக்காக குரல் கொடுத்து வந்தார்.

வைரல் வீடியோ

இந்நிலையில் தர்ஷன் வெளியேறிய தகவலால் கடுப்பான ரசிகர்கள், இதற்கு ஷெரினும் ஒரு காரணம் என டிவிட்டி வருகின்றனர். மேலும் தர்ஷன் வெளியேற்றப்பட்ட நிலையில் ஷெரின் வீடியோ ஒன்றையும் வைரலாக்கி வருகின்றனர்.

இப்போ புரியுது

இப்போ புரியுது

அப்போ புரியல.. இப்போது புரிகிறது என்ற கேப்ஷனில் வைரலாகும் அந்த வீடியோவில், ஷெரின் தனது பள்ளிப்பருவத்தில் நடந்த கதைகளை ஏற்கனவே பகிர்ந்த சம்பவங்கள் உள்ளனர்.

பள்ளிப்பருவ காதல்

பள்ளிப்பருவ காதல்

அதாவது தான் 9ஆம் வகுப்பு படிக்கும் போது, தனக்கு 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் காதல் கடிதம் கொடுத்த சம்பவம் மற்றும் பள்ளித்தேர்வில் ஷெரின் டிஸ்டிங்ஷன் வாங்கியதும், அந்த மாணவன் பத்தாம் வகுப்பு தேர்வில் பெயிலான கதையும் உள்ளது.

வெற்றி வாய்ப்பு இழப்பு

வெற்றி வாய்ப்பு இழப்பு

அந்த வீடியோவை தற்போது வைரலாக்கி வரும் ரசிகர்கள், இதேபோல்தான் தர்ஷனும் ஷெரின் பின்னால் சுற்றி வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X