twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னது பாலாஜி முருகதாஸ் அண்ணனா.. ஷிவானி ஷேர் செய்த போட்டோ.. ஃபேன்ஸ் ரியாக்ஷன் பாருங்க!

    |

    சென்னை: பாலாஜி முருகதாஸுக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்து கூறி நடிகை ஷிவானி நாராயணன் ஷேர் செய்துள்ள போட்டோ இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.

    விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் நடித்தவர் ஷிவானி நாராயணன். அந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் ஆசிம்மை காதலித்தார்.

    பார்த்திபன்,கௌதம் கார்த்திக்கின் பட தலைப்பு வெளியானது… வித்தியாசமான பெயரா இருக்கே ! பார்த்திபன்,கௌதம் கார்த்திக்கின் பட தலைப்பு வெளியானது… வித்தியாசமான பெயரா இருக்கே !

    ஆனால் ஆசிம் ஷிவானியின் காதலை ஏற்க மறுத்ததால் அந்த சீரியலில் இருந்து விலகினார் ஷிவானி. தொடர்ந்து மாடலிங், விளம்பர படங்கள் என பிஸியாக இருந்து வரும் ஷிவானி, சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக உள்ளார்.

    ஷிவானிக்கு 3 மில்லியன் ஃபாலோயர்ஸ்

    ஷிவானிக்கு 3 மில்லியன் ஃபாலோயர்ஸ்

    இன்ஸ்டாகிராமில் மட்டும் 30 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள ஷிவானி, நாள்தோறும் தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார் ஷிவானி.

    பாலாஜிக்கு மசாஜ் செய்த ஷிவானி

    பாலாஜிக்கு மசாஜ் செய்த ஷிவானி

    இதில் சக போட்டியாளரான பாலாஜி முருகதாஸுடன் நெருக்கமாக பழகினார். பாலாஜிக்கு மாசாஜ் செய்வது, ஊட்டி விடுவது, காலையில் அவரை எழுப்பி விடுவது, அவருக்கு பணிவிடைகள் செய்வது என இருந்து வந்தார்

    பாலாஜி ஷிவானி - ஹவுஸ்மேட்ஸ் கிண்டல்

    பாலாஜி ஷிவானி - ஹவுஸ்மேட்ஸ் கிண்டல்

    மேலும் இருவரும் ஒருவரை ஒருவர் நாமினேட் செய்யக் கூடாது என்ற அக்ரிமெண்டிலும் இருந்து வந்தனர். இதனால் இருவருக்கும் காதல் என்ற பேச்சு எழுந்தது. பிக்பாஸ் வீட்டில் இருந்த சக ஹவுஸ்மேட்ஸ்களான ரம்யா பாண்டியன் உள்ளிட்ட சிலரே ஷிவானியையும் பாலாஜியையும் வைத்து கிண்டலடித்தனர்.

    பாலா மாமா பாலா மாமா

    பாலா மாமா பாலா மாமா

    ஷிவானி எப்போதும் பாலா மாமா பாலா மாமா என்றே சுற்றுகிறார். பாலாஜியை எண்டெர்டெய்ன் செய்வதற்காகதான் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார் என கண்டபடி கிண்டலடித்தார் ரம்யா பாண்டியன். ஆனால் இருவரும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நெருக்கமாக பழகி வந்தனர்.

    ஆயா வேலை செய்ய வந்தீயா?

    ஆயா வேலை செய்ய வந்தீயா?

    இந்நிலையில் ஃபிரீஸ் டாஸ்க்கின் போது பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஷிவானியின் அம்மா, பாலாஜியுடன் பழகுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பாலாஜிக்கு ஆயா வேலை செய்யதான் இங்கு வந்தீயா? என் மானத்தையே வாங்கிவிட்டாய் என ரைடு விட்டார். ஷிவானியின் அம்மா வைத்து வாங்கியதில் கதறி அழுதார் ஷிவானி.

    டிஆர்பியை ருசித்தது விஜய் டிவி

    டிஆர்பியை ருசித்தது விஜய் டிவி

    இதனால் நல்ல டிஆர்பியை ருசித்தது விஜய் டிவி. மேலும் பாலாஜியை ஏறேடுத்தும் பார்க்கவில்லை ஷிவானியின் அம்மா அகிலா. இதனால் பாலாஜி பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஷிவானியின் அம்மா பாலாஜியுடன் சமாதானமாகிவிட்டார்.

    கேக் ஊட்டிவிட்ட அகிலா ஆன்ட்டி

    கேக் ஊட்டிவிட்ட அகிலா ஆன்ட்டி

    ஷிவானி வீட்டு விசேஷத்தில் எல்லாம் பங்கேற்றார் பாலாஜி. ஷிவானி பிறந்தநாளின் போது பாலாஜிக்கு அவரது அம்மா கேக் ஊட்டி விட்டார். அந்த போட்டோக்கள் எல்லாம் வைரலானது. அதன் பிறகு பிக்பாஸ் டீம் வெளியில் சந்தித்த போதும் அவர்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வந்தது.

    ஷிவானி போட்டோ - ரசிகர்கள் அதிர்ச்சி

    ஷிவானி போட்டோ - ரசிகர்கள் அதிர்ச்சி

    இதனால் இருவரின் காதலுக்கும் ஷிவானியின் அம்மா சம்மதம் தெரிவித்து விட்டார்கள் என பேச்சு எழுந்தது. இந்நிலையில் நடிகை ஷிவானி நாராயணன் ஷேர் செய்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    பாலாஜிக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்து

    பாலாஜிக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்து

    அதாவது, ஷிவானி, பாலாஜியுடன் இருக்கும் போட்டோவை இணையத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் பாலாஜிக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்து கூறியுள்ளார் ஷிவானி. ரக்ஷா பந்தன் நாளில் சகோதரிகள் சகோதரர்களுக்கு கையில் ராக்கி கட்டுவார்கள். இந்நிலையில் ஷிவானி பாலாஜிக்கு வாழ்த்து கூறியிருப்பதை பார்த்த ரசிகர்கள் அவர் எப்போது உங்களுக்கு சகோதரர் ஆனார் என கேட்டு வருகின்றனர்.

    அம்மா அடித்து போட சொல்லியிருப்பார்..

    அம்மா அடித்து போட சொல்லியிருப்பார்..

    ஷிவானி பாலாஜிக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்து சொல்லும் ஸ்டோரியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் பல நெட்டிசன்கள், ஷிவானி பாவம் என்றும் அவரது அம்மா அவரை அடித்து இப்படி ஒரு ஸ்டோரியை போட சொல்லியிருப்பார்கள் என்றும் கூறி வருகின்றனர்.

    அண்ணன் தங்கைக்கான மரியாதையே போய்விட்டது

    அண்ணன் தங்கைக்கான மரியாதையே போய்விட்டது

    இந்த நெட்டிசன், இதை எதிர்பார்க்கவில்லை.. சேர மாட்டார்கள் என்று தெரியும் அதற்காக இப்படியா... அண்ணன் தங்கைக்கான மரியாதையே போய்விட்டது என்று கூறியுள்ளார். மேலும் அட்மினே ஷிவானியின் அம்மாதான் என்றும் கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

     பிக்பாஸ் ஸ்க்ரிப்ட்டாக இருக்குமோ

    பிக்பாஸ் ஸ்க்ரிப்ட்டாக இருக்குமோ

    இந்த நெட்டிசன் இதையெல்லாம் பார்க்கும் போதுதான் பிக்பாஸ் ஸ்க்ரிப்ட்டாக இருக்குமோ என்று தோன்றுகிறது என்று கூறி வருகின்றனர். மற்றொரு நெட்டிசனான இவர் உண்மையில் இதை எதிர்பார்க்கவில்லை என அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

    English summary
    Biggboss Shivani Narayanan Wishes Balaji Murugadoss for Raksha Bandhan. Shivani and Balaji were very close in Biggboss house.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X